பக்கம் எண் :

424அயோத்தியா காண்டம்

பாதுகாக்கின்ற அந்தணன்; ‘உலகு ஏழும் அமை’ எனின் -
ஏழுலகங்களையும்  படைக்க என்றாலும்; அமரேசன் - தேவ தேவனாகிய
திருமால்; உந்தியின் உதவாமே - தனது திருநாபிக்கமலத்தின் மூலமாகப்
படைக்க வேண்டாதபடி;  உதவிடு - தனது சங்கற்பத்தாலேயேபடைக்கும்;
தொழில் வல்லான் - தொழிலில் வல்லவன்.

     பரத்துவாச முனிவனது  அருளாற்றலும் தவ ஆற்றலும் கூறியவாறு.
எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூணுதலே அந்தணர் இயல் என்ற குறளினைக்
கம்பர் நினைவுக்கூர்கிறார்.                                   22

முனிவன், இராமன் வனம் வந்த காரணம் வினாவல்  

2021.அம் முனி வரலோடும்,
     அழகனும், அலர் தூவி
மும் முறை தொழுதான்; அம்
     முதல்வனும், எதிர்புல்லி,
‘இம் முறை உருவோ நான்
     காண்குவது?” என உள்ளம்
விம்மினன்; இழி கண்ணீர்
     விழி வழி உக நின்றான்

     அம் முனி வரலோடும் - அத்தகைய பரத்துவாச முனிவன் வந்த
அளவில்; அழகனும் -இராமனும்; அலர் தூவி - மலர்களைத் தூவி;
மும்முறை தொழுதான் - மூன்று முறைவணங்கினான்; அம் முதல்வனும்-
அந்தப் பெரியோனாகிய பரத்துவாசனும்;  எதிர்புல்லி - எதிரே தழுவி;
இம்முறை உருவோ நான் காண்குவது என- இப்படிப்பட்டவேடத்தொடு
கூடிய வடிவத்தையோ என் கண்ணால் காணும்படியானது  என்று;  உள்ளம்
விம்மினன் -
மனம் பொருமினனாய்; இழி கண்ணீர் விழி வழி உக
நின்றான் -
கீழ்நோக்கிஇறங்கும் கண்ணீர் கண்களின் வழிவந்து கீழே
சிந்தும்படி நின்றான்.

     அரச குமாரனின் தவக் கோலத்தைக் கண்டானாதலின் ‘இம்முறை
உருவோ நான் காண்பது’ என்றுஇரங்கினான்.                       23

2022.‘அகல் இடம் நெடிது ஆளும்
     அமைதியை; அது தீர,
புகல் இடம் எமது ஆகும்
     புரையிடை, இது நாளில்,
தகவு இல தவ வேடம்
     தழுவினை வருவான் என் -
இகல் அடு சிலை வீர! -
     இளையவனொடும்?’ என்றான்.