‘இகல் அடு சிலை வீர! - பகையை அழிக்கின்ற வில்லை ஏந்திய வீரனாகியஇராமனே!; அகல் இடம் நெடிது ஆளும் அமைதியை- பரந்த இவ்வுலகம் முழுமையும் நீண்ட காலம்ஆளக்கூடிய தகுதியை உடையாய்; அது தீர - அத்தன்மை நீங்க; இது நாளில் -இப்போது; புகல் இடம் எமது ஆகும் புரை இடை - எம்போன்ற தவமுனிவர்கள் தங்கிவாழும் இடமாகிய குகைகள் உள்ள வனத்திடத்து; தகவு இல தவ வேடம் - உன் தன்மைக்குப்பொருந்தாத தவத்தோர் வேடத்தை; இளையவனொடும் - இலக்குவனோடும்; தழுவினை -மேற்கொண்டவனாய்; வருவான் என்? ‘என்றான் - வருவதற்கு என்ன காரணம்’ என்றுவினவினான். அரச குமாரனாகிய இராமனுக்கு மரவுரியும் சடைமுடியும் ஆகிய தவக்கோலம் பொருந்தாது என்றுகருதி. ‘தகவு இல தவ வேடம்’ என்றார் என்பதாம். புரை - குகை. முனிவர்கள் குகைகளில் தங்கிவாழ்தல் பழக்கம். அவை உள்ள இடம் காடு ஆகும். 24 இராமன் பதில் உரைத்தலும் முனிவன் அது கேட்டு வருந்தலும் 2023. | உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரைசெய்தான்; நல் தவ முனி, ‘அந்தோ! விதி தரு நவை!’ என்பான், ‘இற்றது செயல் உண்டோ இனி?’ என, இடர் கொண்டான், ‘பெற்றிலள் தவம், அந்தோ! பெரு நிலமகள்’ என்றான். |
உற்று உள பொருள் எல்லாம் உணர்வுற உரை செய்தான் - நடந்து முடிந்த செய்திகள்எல்லாவற்றையும் நன்கு புரிந்துகொள்ளும்படி முனிவனுக்கு இராமன் பதில் கூறினான் (அதுகேட்ட); நல் தவ முனி- நல்ல தவசியாகிய பரத்துவாசனும்; ‘அந்தோ! விதிதரும் நவை என்பான் - ஐயகோ! விதி தந்த துன்பம்’ என்பானாய்; ‘இனி - இக்காலத்திலும்; இற்றது செயல் உண்டோ - இப்படிப்பட்ட செயல் நிகழுமா; ‘என - என்று; இடர்கொண்டான் - மிக்க துன்பம் கொண்டு; ‘பெரு நிலமகள் - பெரிய பூதேவியானவள்; தவம் பெற்று இலள் அந்தோ! ‘என்றான் - உன்னைப் பெறுதற்குத் தவம் செய்து இருந்தும்உன்னால் ஆளப்படுதற்கு அத்தவம் இல்லாதவள் ஆனாள் ஐயோ!’ என்றான். ‘விதி தரும் நவை’ என்றது நடந்த நிகழ்ச்சிகளின் தவறு தசரதன். கைகேயி மாட்டுஅன்று. விதியால் விளைந்தது என்றவாறாம். முன்னர் ‘மைந்த! விதியின் பிழை’ என்றுஇலக்குவனுக்கு இராமன் கூறியதனை (1734) இங்குக் கருதுக. |