| புல்லினன், உடனே கொண்டு இனிது உறை புரை புக்கான். |
‘அல்லலும் உள இன்பம் அணுகலும் உள அன்றோ? - துன்பமும் இன்பமும் வாழ்க்கையில் மாறி மாறி வந்து சேருதல் உண்டு அல்லவா?; நல்லவும் உள செய்யும் நவைகளும்உள; அந்தோ! - நாம்செய்யும் நல்வினைகளும் உள்ளன; தீவினைகளும் உள்ளன. ஐயோ!(அவற்றின் பயனே இன்ப துன்பங்கள்) ஆகவே; நான் இன்று இடர் உறும் இதின் ஓர் பயன்இல்லை - நான் இன்று துன்பப்படுகின்ற இதனால் ஒரு பயனும் இல்லை;’ என்னா - என்றுமுனிவன் கூறி; புல்லினன் - இராமனைத் தழுவியவனாய்; உடனே கொண்டு - சேரஅழைத்துக் கொண்டு; இனிது உறை புரை புக்கான் - தான் இனிதாகத் தங்கி யுள்ளதாகிய தவச்சாலையிற் புகுந்தான். அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப விதிவழி இன்ப துன்பங்கள் விளையும். ஆதலின், இராமா! நீ வனம் புகுந்தது கருதி நான் வருந்துவதில் பயன் ஏதும் இல்லை என்றுபரத்துவாசன் கூறினான். 27 முனிவன் விருந்தோம்புதுல் 2026. | புக்கு, உறைவிடம் நல்கி, பூசனை முறை பேணி, தக்கன கனி காயும் தந்து, உரைதரும் அன்பால் தொக்க நல்முறை கூறி, தூயவன் உயிர்போலம் மக்களின் அருள் உற்றான்; மைந்தரும் மகிழ்வு உற்றார். |
புக்கு - தவச்சாலையில் புகுந்து; உறைவிடம் நல்கி - அவர்கள் தங்குதற்குரிய இடத்தைத் தந்து உபசரித்து; தக்கன கனி காயும் தந்து - உண்ணத்தக்கனவாகிய காய் கனிகளையும் கொடுத்து; உரைதரும் அன்பால் -பாராட்டத்தகுந்த அன்போடு; தொக்க நல் முறை கூறி - கூடிய நல்ல உபசாரவார்த்தைகளைச் சொல்லி; தூயவன் - தயரதனது; உயிர் போலும் - உயிர்போலச் சிறந்த; மக்களின் - பிள்ளைகளினிடத்து; அருள் உற்றான் - அருளைச்செய்தான்; மைந்தரும் மகிழ்வு உற்றார் - முனிவனது உபசரிப்பில் இராமலக்குவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள். சீதை இராமனுள் அடங்கியவள் ஆதலின் மைந்தர் என்றார். தூயவன் பரத்துவாசனும்ஆம். 28 |