பக்கம் எண் :

மந்திரப் படலம் 43

தனக்குரிய கடமை  என்று  உணர்ந்தும்;  கொற்றவன்  யாது  ஏவியது -
அரசன் எதனைச் செய்யுமாறுஆணையிட்டானோ; அது செயல் அன்றோ -
அதனைச் செய்வதல்லவா;  எற்கு நீதி என நினைந்தும்- எனக்கு நியாயம்
என்று எண்ணியும்;  அப் பணி தலைநின்றான் - அரச பதவி ஏற்றலாகிய
அச்செயலை மேற்கொண்டு நின்றான்.

     இதனால் இராமன் ஆட்சியின்மீது விருப்போ வெறுப்போ இன்றி
இருந்த தன்மையும் அவன் தந்தையின்சொற்களை மந்திரமாகக் கருதுபவன்
என்னும் உண்மையும் சுட்டப்பட்டுள்ளன.                         69

                   தயரதன் மகிழ்ந்து, தன் அரண்மனைக்குப் போதல்

1383.குருசில் சிந்தையை மனக்கொண்ட
     கொற்ற வெண்குடையான்,
‘தருதி இவ் வரம்’ எனச் சொலி,.
    உயிர் உறத் தழுவி,
சுருதி அன்ன தன் மந்திரச்
    சுற்றமும் சுற்ற,
பொரு இல் மேருவும் பொரு அருங் கோயில்
    போய்ப் புக்கான்.

     குருசில் சிந்தையை - இராமனது மனக் கருத்தை;  மனம் கொண்ட
கொற்ற வெண்குடையான்
- உட்கொண்ட வெற்றி பொருந்திய
வெண்குடையை யுடையவனாகிய தயரதன்;  ‘இவ் வரம் தருதி -இந்த
வரத்தைத் தருவாய்;’ எனச் சொலி - என்று சொல்லி; உயிர் உறத்தழுவி-
அவனைத் தன் உயிரோடு பொருந்தும்படி  இறுக அணைத்துக் கொண்டு;
சுருதி அன்ன - வேதத்தையொத்த; தன் மந்திரச் சுற்றமும் சுற்ற -
தன்னுடைய அமைச்சர்களின் கூட்டமும் தன்னைக்சூழ்ந்துவர;  பொரு இல்
மேருவும்
- ஒப்பு அற்ற மேரு மலையும்;  பொரு அருங் கோயில்-
ஒப்பாவதற்கு அரிய தன் அரண்மனையில்;  போய்ப் புக்கான் - போய்ச்
சேர்ந்தான்.

     நன்மை தீமைகளை ஆராய்ந்து  அரசனுக்குச் சொல்லி  நீதி வழி
நிறுத்துதல்  பற்றி அமைச்சர்களுக்குச்சுருதியை உவமையாகக் கூறினார்.
மேருவும் - உம்மை.  உயர்வு சிறப்பு.                            70

                                 இராமன் தன் அரண்மனை சேர்தல்

1384.நிவந்த அந்தணர்,
     நெடுந் தகை மன்னவர், நகரத்து
உவந்த மைந்தர்கள்,
    மடந்தையர், உழைஉழை தொடர,