பக்கம் எண் :

446அயோத்தியா காண்டம்

 குழைந்த நுண் இடைக் குவி இள
     வன முலைக் கொம்பே!
தழைந்த சந்தனச் சோலை தன்
     செலவினைத் தடுப்ப,
நுழைந்து போகின்றது ஒக்கின்ற
     மதியினை நோக்காய்!

     இழைந்த நூல் - ஓர் இழையாக அமைந்த நூலானது; இணைமணிக்
குடம் சுமக்கின்றதுஎன்ன -
இரண்டு மணிக்கற்கள் அழுத்திய குடத்தைச்
சுமக்கின்றது  என்று சொல்லுமாறு; குழைந்த - ஒல்கித் தளருகின்ற;  நுண்
இடை -
நுண்ணிய இடையையும்;  குவி இள வனமுலைக் கொம்பே! -
திரண்ட இளமையான அழகிய தனங்களையும் உடைய பூங்கொம்பு
போன்றவளே!;தழைந்த சந்தனச் சோலை - தழைத்து மிகுந்துள்ள
சந்தனமரச் சோலையானது;  தன்செலவினைத் தடுப்ப - (மதியாகிய)
தன்னுடைய வானத்திற் செல்லும் செலவினைத் தடுத்தலான்; நுழைந்து
போகின்றது  ஒக்கின்ற -
அந்தச் சோலைக்குள் புகுந்து போவதை
ஒத்திருக்கின்ற;  மதியினை - சந்திரனை;  நோக்காய் - பார்ப்பாயாக.

     காம்புடைய நகில்கள் உச்சியில் நீலமணி அழுத்திய குடம்
போன்றனவாதலின் ‘மணிக்குடம்’என்றார். வானத்திற் செல்லும் சந்திரன்
அடர்த்தியாகவுள்ள சந்தனச் சோலையில் உள்புகுந்துசெல்வதைப்
போன்றுள்ளது என்றது தற்குறிப்பேற்றவணியாம். தழைத்த என்பது தழைந்த
எனமெலிந்தது.                                                9

2055.‘உருகு காதலின் தழைகொண்டு
     மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை
     முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு
     பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று
     அளிப்பது - பாராய்!

     பிறை மருப்பு ஒரு யானை - பிறைமதி போன்ற  தந்தத்தை உடைய
ஒரு களிற்றியானை;பெருகு சூல் இளம் பிடிக்கு - முதிர்ந்த
கருப்பத்தையுடைய இளைய (தன் பெண் யானைக்கு; உருகு காதலின் -
மனம் உருகுதற்குக் காரணமான அன்பினால்; தழை கொண்டு மழலை
வண்டுஓச்சி -
தழைகளைக் கொண்டு இனிய குரல் உடைய வண்டுகளை
ஓட்டி;  முருகு நாறு - மணம்வீசுகின்ற;  செந்தேனினை - ;  முழை
நின்றும் வாங்கி -
மலைக் குகையிலிருந்தும்எடுத்து; வாயினில் பருக -
வாயால் பருகும்படி; கையின் நின்று - தனது