| கூடுகின்றிலர், கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப் பாடுகின்றன, கின்னர மிதுனங்கள் - பாராய்! |
ஆடுகின்ற மா மயிலினம் அழகிய குயிலே! - (கார் கண்டு களிப்புற்றுத் தோகைவிரித்து) ஆடுகின்ற சிறந்த மயிலைக்காட்டிலும் (சாயலால்) அழகுடைய குயில்போலும் குரல்உடையவளே!; கொடிச் சியர்- குற மகளிர்; தம்மனம் கொதிப்ப ஊடுகின்றனர் -தம் மனம் கொதிக்கின்றபடியால் (கணவர் மேல்) ஊடல் கொண்டவராய்; கூடுகின்றிலர் -(கணவரைக்) கூடாமல் இருக்கின்ற அவர்; கொழுநரை - தம் கணவரை; உருகினர் -(தாமே) அன்பினால் உருகியவர்களாய்க் (கூடுதற்குறிப்பினால்); நோக்க -பார்க்கும்படி; கின்னர மிதுனங்கள் - ஆணும் பெண்ணுமாய் இணைந்திருக்கும் கின்னரமிதுனங்கள்; பாடுகின்றன-; பாராய்-. ஊடலாற் பிரிந்த குறத்தியரைக் கணவர்பால் தம் பாடலாற் கின்னர மிதுனங்கள் சேர்த்துவைப்பனவாயின என்பது கருத்து. கின்னர மிதுனம் - மனித முகமும் குதிரை உடலும் புடைத்து ஆனும்பெண்ணுமாய் இணைந்தே இருந்து கின்னரம் என்னும் இசைக்கருவி கொண்டு பாடும் தன்மை உள்ள தேவசாதியினர். 12 2058. | ‘வில்லி’ வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே! வல்லிதாம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம், கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடுங் கவலை கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன - காணாய். |
வில்லி வாங்கிய சிலை எனப் பொலிநுதல் விளக்கே! - வில்லுடைய வீரன் வளைத்தவில்போன்ற புருவத்தால் விளங்குகின்ற நெற்றியை உடைய விளக்குப் போன்றவளே!; வல்லிதாம் - கொடிகள்; கழை கழை தாக்கலின் - மூங்கில் மோதுவதால்; வழிந்து இழி பிரசம் - தம்மிடத்துள்ள தேனடை கெட்டு இழிகின்ற தேனானது; கொல்லிவாங்கிய குன்றவர் - கொல்லிப் பண்ணைக் கேட்கி்ன்ற குறவர்கள்; நெடுங் கொடிக் கவலை - நீண்ட கொடிகளை உடைய கவலைக் |