வரிகொள் ஒண்சிலை வயவர் - கட்டமைந்த ஒள்ளிய வில்லை உடைய வீரர்கள்; தம் கணிச்சியின் மறித்த - தம்முடைய கோடாலிப் படையால் வெட்டி வீழ்த்திய; பரியகால் அகில் கூட - பருத்த கரிய நிறமுள்ள அகில் கட்டையைச் சுடுதலால்; நிமிர் பசும்புகைப்படலம் - மேல் செல்லுகின்ற அடர்ந்த புகைத் தொகுதி; அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளவி - சொல்லுதற்கரிய புகழ் படைத்த அந்தணர்களது ஓம குண்டத்திலிருந்து எழுகின்ற புகையோடும் கலந்து; கரிய மால்வரைக் கொழுந்து எனப் படர்வன - கரியநிறமுள்ள பெரிய மலைச்சிகரங்களைப் போல வானத்தில் படர்ந்து செல்லுகின்றவற்றை; காணாய் -. வேடுவர் அகில் சுட்ட புகைம், வேதியர் வேள்விப் புகையும், ஒன்று கலந்து மலைச்சிகரம் போல் உள்ளது என்பதால் மறமும் அறமும் கலந்து விளங்குவதைக்குறிப்பிட்டார். 18 2064. | ‘நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை வார் குழற் சுமை பொறாது இறும் இடைத் தோகாய்! வான யாறு மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த கான யாறுகள் கதிர் மணி இமைப்பன - காணாய்! |
நானம், நாள்மலர், நறை, அகில், நாவி, தேன், நாறும் சோனை வார் குழல்சுமை பொறாது - புழுகு, அன்றலர்ந்த மலர், மணப் பொருள், அகிற்புகை, கத்தூரி, தேன்இவற்றைப் பெற்று மணம் வீசும் திரண்ட நீண்ட கூந்தல் பாரத்தைத் தாங்க மாட்டாமல்; இறும் இடைத்தோகாய் - ஓடிகின்ற இடையினை உடைய மயில் போன்றவளே!; வான யாறு - வான வழியில்; மின் மலர்ந்து என - நட்சத்திரங்கள் தோன்றின என்னும்படி; புனல் வறந்த கான யாறுகள் - நீர் வற்றிப் போன காட்டாறுகளில்; கதிர் மணி இமைப்பன- ஒளியுடைய மணிகள் விட்டு விளங்குகின்றவற்றை; காணாய் -. நானம் முதலியன கூந்தலுக்கு ஊட்டும் மண விசேடமாம். வான யாறு- தேவகங்கை என உரைத்து அதில் வண்ண மீன்கள் போல எனலும் ஆம். 19 2065. | ‘மஞ்சு அளாவிய மாணிக்கப் பாறையில் மறைவ, செஞ்செவே நெடு மரகதப் பாறையில் தெரிவ. |
|