தெரிவைமார்க்கு - மகளிர்க்கு; ஒரு கட்டளை எனச் செய்த திருவே - ஓர்உரைகல் போலச் செய்த திருவே!; கடுவன்கள் - ஆண் குரங்குகள்; அன்பு கொண்டு(முனிவர்பால்) அன்பு கொண்டு; பெரிய மாக் கனி - பெரிய மாம் பழம்; பலாக்கனி - பலாப் பழம்; பிறங்கிய வாழை அரிய மாக் கனி - விளங்கிய வாழையினது அரிய பெரும் பழம் ஆகியவற்றை; அளிப்ப - கொடுக்க; கரி மா -கரியவிலங்காகிய பன்றிகள்; அகழ்ந்தன - (தாம்) தோண்டி எடுத்தனவாகிய; கிழங்கு- கிழங்குகளை; கொணர்வன - கொண்டுவந்து தருவனவற்றைக்; காணாய் -. ஆண் குரங்குகள் மா, பலா, வாழை என்னும் பழங்களைத் தருகின்றன. பன்றிகள் கிழங்குகளத்தருகின்றன என்பதாம் மகளிரைப் படைத்தற்கு முன்மாதிரியாகச் செய்தமைத்துக் கொள்ளும் வடிவம்கட்டளை எனப்படும். அத்தகைய அழகு வடிவமே பிராட்டி என்றானாம். ‘கமலத்துக் கடவுள் தானே, .....உருவினுக்கு உலகம் மூன்றின் இருதிறத்தார்க்கும் செய்தவரம்பு இவர் இருவர்’ (2792) என்கிற சூர்ப்பணகை இங்கு ஒத்துக் கருதுக. 33 2079. | ‘ஐவனக் குரல், ஏனலின் கதிர், இறுங்கு, அவரை மெய் வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி, பொய் வணங்கிய மா தவர் புரைதொறும் புகுந்து, உன் கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன - காணாய்! |
உன் கை வணத்த வாய்க் கிள்ளை - (சீதையே!) உன் கை போன்ற செந்நிறவாயினையுடைய கிளிகள்; ஐவனக் குரல் - மல நெல் கதிர்; ஏனலின் கதிர் -தினைக் கதிர்; இறுங்கு - சோளக் கதிர்; அவரை - அவரைகள்; மெய்வணக்குறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி - உடலால் வளைவு பொருந்திய மூங்கிலிற் பிறந்தமென்மையான அரிசி ஆகியவற்றை; பொய் வணங்கிய மாதவர் - பொய்யை ஓட்டிய முனிவர்களது; புரைதொறும் - ஆசிரமக் குடில்கள் தோறும்; புகுந்து - நுழைந்து; தந்து அளிப்பன- கொடுத்து அன்பு செய்வனவற்றை; காணாய்-. வணங்கி - வணங்கச் செய்த - இங்குத் தோல்வியைக் குறித்தது; பொய்யைத் தோற்கடித்தமுனிவர்கள். கிளிகள் முனிவர்களுக்கு உணவு கொண்டுவந்து அன்புடன் கொடுத்து உதவுகின்றனஎன்றாராம். 34 2080. | ‘இடி கொள் வேழத்தை எயிற்றொடும் எடுத்து உடன் விழுங்கும். |
|