பெருந்துறை மண்டிட- பெரிய நீர்த்துறைகளில் நெருங்கிப் பாய; சிதர்ந்து சிந்தி அழிந்தன -சிதறிக் கெட்டு வீணாகின; ஒள் மலர் ஈட்டம் - ஒளி படைத்த (அழகிய)மலர்த்தொகுதி; கொய்யுநர் இன்மையின் - பறித்துச் சூடுவார் இல்லாமையால்; மூக்குஅவிழ்ந்து - தம் காம்பு கழலப்பெற்று; உதிர்ந்து உலர்ந்தன - (கீழே) உதிர்ந்து காய்ந்து போயின. நாட்டில் உள்ளார் துயர மிகுதியால் கனி உண்ணுதலையும், மலர் சூடுதலையும் துறந்தனர்.இப்பாடலில் “கொய்யுநர் இன்மையின்” என்பதனை இடைநிலைத் தீவகவணி எனக் கொண்டு ‘தேம்கனி’, ‘மலர் ஈட்டம்’ என்ற இரண்டனோடும் முன்னும் பின்னும் கூட்டுக. இது ஊசற் பொருள்கோள் எனவும் பெறும். ‘ஏ’ ஈற்றசை. 20 2122. | ‘ஏய்ந்த காலம் இது இதற்கு ஆம்’ என ஆய்ந்து, மள்ளர் அரிகுநர் இன்மையால், பாய்ந்த சூதப் பசு நறுந் தேறலால் சாய்ந்து, ஒசிந்து, முளைத்தன சாலியே. |
சாலி - செந்நெற் பயிர்கள்; ‘இதற்கு ஏய்ந்த காலம் இது ஆம்’ என ஆய்ந்து - இப்பயிரை விளைத்தற்கும், அறுத்தற்கும் பொருத்தமான காலம் இதுவாகும் என்று ஆராய்ந்து; அரிகுநர் - அரிகின்றவர்களாகிய; மள்ளர் இன்மையால் - உழவர்கள் அத்தொழில்புரிபவராய் இல்லாமையால்; பாய்ந்த - (பறிப்பார் இல்லாமையால்) சிந்தி அழிந்த; சூதப் பசு நறுந் தேறலால் - மாம்பழத்தின் நல்ல இனிய சாற்றினால்; சாய்ந்து- தலை சாய்ந்து; ஒசிந்து - வளைந்து அடி முறிந்து; முளைத்தன - (தம் தானியங்கள் கீழே விழ மீண்டும்) முளைத்தன. தேறல் - மது, இங்கு அது போன்ற மாம்பழச் சாற்றை உணர்த்தியது. காலம் கருதிப் பயிரைஅறுக்காத போது அவை மீண்டும் நிலத்திற் சிந்தி முளைத்ததாகக் கூறினார். மள்ளர்சோதித்தலின் அறுத்திலர் என்க. ‘ஏ’ ஈற்றசை. 21 2123. | எள் குலா மலர் ஏசிய நாசியர், புள் குலா வயல் பூசல் கடைசியர், கட்கிலார் களை; காதல் கொழுநரோடு உள் கலாம் உடையாரின், உயங்கினார். |
எள் குலா மலர் - என் அழகு விளங்கும் மலரை; ஏசிய - (தன் அழகால்) பழித்த; நாசியர் - மூக்கை உடையவராகிய; புள்குலா வயல் - பறவைகள்மகிழ்ந்து திரிகின்ற வயலிலே; பூசல் - தொழில் செய்கின்ற; கடைசியர் -உழத்தியர்; காதல் கொழுநரோடு - தம்மால் அன்பு செய்யப்பெற்ற கணவரோஈடு; உள்கலாம் உடையாரின் - |