ஆடல் - சிலேடையால் இருபொருள் தந்தது. நடனமாடல், நீராடல் என்பன முறையேஅரங்கிற்கும் நீர்நிலைக்கும் ஆயின. ‘புனல்’ என்பது யாற்று நீரைக் குறிக்கும். சூடிகை -உச்சி, ‘சூடா’ என்னும் வடசொல் ‘சூடி’ என்றாகி ‘க’ ப்ரத்யயம் பெற்று ‘சூடிகை’ என்றாகியது.வள்ளைப்பாட்டு - உரற்பாட்டு. தம்தலைவனைப் புகழ்ந்தும் மற்றவரைக் குறைத்தும் பாடுதலின் ஏற்றிழிவுடைய உரற்பாட்டாகும். ‘கொற்ற வள்ளை’ என்று புறத்திணையில் வரும் துறையும்இக்கருத்தினதே. குறைத்துப்படாது புகழ்ந்து பாடுதல் மட்டும் வருதலின் ‘மங்கள வள்ளை’என்பர். இப்பெயரில் ஒரு சிறு பிரபந்தம் உண்டு. ‘ஏ’ ஈற்றசை. 24 2126. | நகை இழந்தன, வாள் முகம்; நாறு அகிற் புகை இழந்தன, மாளிகை; பொங்கு அழல் சிகை இழந்தன, தீவிகை; தே மலர்த் தொகை இழந்தன, தோகையர் ஓதியே |
வாள்முகம் - (கோசல நாட்டவரது) ஒளி படைத்த முகங்கள்; நகை இழந்தன - மகிழ்ச்சிச் சிரிப்பை இழந்தன; மாளிகை - (அந்நாட்டு) மனைகள்; நாறு அகில்புகை இழந்தன - மணம் வீசுகின்ற அகிற்புகை இழந்தன; தீவிகை - (ஏற்றிய) தீபவிளக்குத் தண்டுகள்; பொங்கு அழல் சிகை இழந்தன - மேல் நோக்கி எரியும் நெருப்புச் சுடரை இழந்தன; தோகையர் ஓதி - மகளி்ரின் கூந்தல்; தே மலர்த் தொகை இழந்தன- தேன் பொருந்திய மலர்த் தொகுதிகளை இழந்தன. ‘இழந்தன’ என்பது நான்கு முறை ஒரு பொருளிலேயே வருதலின் ‘சொற்பொருட் பின்வருநிலையணி’. தீவிகை என்பது ‘தீபிகா’ என்னும் வட சொல்லின் தமிழ் வடிவம். பெண்கள்கூந்தலில் மலர் சூடவில்லை என்பதை ‘ஓதி மலர்த்தொகை இழந்தன’ என்றார். ‘ஏ’ ஈற்றசை. 25 2127. | அலர்ந்த பைங் கூழ், அகன் குளக் கீழன, மலர்ந்த வாயில் புனல் வழங்காமையால், உலர்ந்த - வன்கண் உலோபர் கடைத்தலைப் புலர்ந்து நிற்கம் பரிசிலர் போலவே. |
அகன் குளக் கீழன - அகன்ற குளத்தின் தலை மடைக்கீழ் உள்ளன வாகிய; அலர்ந்த பைஞ்கூழ் - வளமான பசிய நெற்பயிர்; மலர்ந்த வாயில் - விரிந்துள்ளமதகு வழியாக; புனல் வழங்காமையால் - ஓடி வந்து விழும் நீர் வராதபடியால்; வன்கண் - (இரப்போர்க்குச் சிறிதும் கொடாத) கொடுமையுடைய; உலோபர் -கருமிகள்; கடைத்தலை - வாயில் முகப்பிலே; புலர்ந்து நிற்கும் பரிசிலர் போல- (ஒன்றும் பெறாமையால்) கருமிபோல - (ஒன்றும் பெறாமையால்) வாடி நிற்கும் இரவலர்களைப் போல; உலர்ந்த - காய்ந்துபோயின. பெரும் பொருள் இருந்தும் கருமிகள் மனம் இன்மையால் பொருள் தராமையால் இரவலர் அவர்வாயில்முன் வாடிக் கிடப்பர். அது குளத்தில் நீர் |