பக்கம் எண் :

488அயோத்தியா காண்டம்

     நாட்டைக் கண்ட அளவிலே  தீய செய்தியைக் கேட்கப்போகிறோம்
என்னும் நினைவுஉண்டாயிற்று என்பதாகும்.  துன்ப மிகுதியில் பெரு மூச்சு
எறிதல் வழக்கு. ‘அரோ’ஈற்றசை.                                 28

பரதன் அழகு அழிந்த நகரின் நிலையைப் பார்த்தல்  

2130.மீண்டும் ஏகி, அம் மெய் எனும் நல் அணி
பூண்ட வேந்தன் திரு மகன், புந்திதான்
தூண்டு தேரினம் முந்துறத் தூண்டுவான்,
நீண்ட வாயில் நெடு நகர் நோக்கினான்.

     மெய் எனும்  நல் அணி பூண்ட அவ் வேந்தன் - வாய்மை
என்னப் பெறுகின்ற சிறந்தஅணியை அணிந்துகொண்ட அந்தத்
தயரதனுடைய;  திருமகன் - சிறந்த மகனாகிய பரதன்; மீண்டும் ஏகி -
மேலும் சென்று; புந்திதான் - அறிவானது; தூண்டு தேரினும் -விரைவாகச்
செலுத்தப்படுகின்ற தேரைக் காட்டிலும்;  முந்துற - முற்படடுச் செல்லும்படி;
தூண்டுவான் -அறிவை முற்படச் செலுத்தி ஆராய்பவனாகி; நீண்ட
வாயில்
-நெடிதுயர்ந்த வாயிலை உடைய; நெடுநகர் - சிறந்த அயோத்தி
நகரை; நோக்கினான் -உள்உணர்வோடு பார்த்தான்.

     நாடு பொலிவிழந்த நிலை கண்ட உண்டாகிய துன்பம் அவன் புத்தியை
விரைவாகச்செலுத்தியது.  ஆதலின் விரைந்து  நகர்வாயிலை அடைந்தான்.

     அயோத்தியின் ‘வைஜெயந்தம்’ என்ற பெயருடைய மேற்கு வாயிலைப்
பரதன் அடைந்தான் என்றுவான்மிகம் கூறும்.                      29

கொடி இழந்த நகர் காணல்  

2131.‘அண்டம் முற்றும் திரிந்து அயர்ந்தாய்’ அமுது
உண்டு போதி’ என்று, ஒண் கதிர்ச் செல்வனை.
விண் தொடர்ந்து விலக்குவ போல்வன,
கண்டிலன், கொடியின் நெடுங் கானமே,

    ஒண் கதிர்ச் செல்வனை - ஒளி படைத்த ஆயிரம் கதிர்களைத் தன்
செல்வமாக உடைய கதிரவனை (நோக்கி); ‘அண்டம்முற்றும்
- எல்லா
உலகங்களும் அடங்க; திரிந்து அயர்ந்தாய் - (நீ) சுற்றிஅலைந்து
சோர்ந்து  போனாய்;  அமுது உண்டு போதி - (எங்கள் நகரிலே) தங்கி
உணவுஅருந்திச் செல்வாயாக; என்று -;  விண்தொடர்ந்து - (அக்
கதிரவன் ) செல்லும் வான்அளாவித் தொடர்ந்து சென்று; விலக்குவ
போல்வன
- (அப்பரிதியைத்) தடுப்பனபோல்வவாகிய; கொடியின் -
(அயோத்தி நகரக்) கொடிகளின்; நெடுங்கானம் - பெரியகாட்டை;
கண்டிலன் - (பரதன்) காணப்பெறாதன் ஆனான்.