அந்நகரத்துப் பலவிடங்களிலும் முன்பு கொடிகள் இருந்தமையும் இப்போது இல்லாமையும் கூறப்பட்டன. வானளாவக் கொடிகள் உயர்ந்திருப்பதும் தடுத்தாற்போலஅசைவதும், சூரியன் செலவைத் தவிர்த்துச் சோர்வு நீக்கி உண்டு இளைப்பாறிச் செல்ல நகர்க்கு அழைப்பதாகக் கற்பனை செய்யப்பெற்றது. இது தற்குறிப்பேற்றவணி. கானம் - கொடிகளின் மிகுதி- ‘காடு’ என்னும் பொருள் இங்கே தொகுதி எனப் பொருள்பட்டது, மரங்களில் தொகுதி காடு, ஆதலின் ‘ஏ’ ஈற்றசை. 30 கொடைமுரச ஒலி அவிந்த நகர் காணல் 2132. | ‘ஈட்டு நல் புகழ்க்கு ஈட்டிய யாவையும், வேட்ட, வேட்டவர் கொண்மின், விரைந்து’ எனக், கோட்டி மாக்களைக் கூவுவ போல்வன, கேட்டிலன், முரசின் கிளர் ஓதையே. |
‘ஈட்டிய யாவையும் - தேடித் தொகுத்த எல்லாச் செல்வங்களையும்; நல்புகழ் ஈட்டுக்கு - நல்ல புகழைப்பெறுதற்கு; வேட்ட - தாம் விரும்பியவற்றை; வேட்டவர் - விரும்பியவர்கள்; விரைந்து கொண்மின்’ - விரைவாக வந்து வாங்கிக்கொள்ளுங்கள்; என - என்று; கோட்டி மாக்களை- கூட்டமாக உள்ள மக்களை; கூவுவபோல்வன - கூவி அழைப்பன போல்வனவாகிய; முரசின் கிளர் ஓதை - கொடை முரசின் செருக்கிய ஒலியை; கேட்டிலன்- (பரதன்) கேட்கப் பெற்றிலன். கொடை முரசு ஒலித்தலை இரவலர்களைக் கூவி அழைத்தல் போலும் என்றது தன்மைத்தற்குறிப்பேற்ற அணி. கோட்டி - அவை, மக்கள் கூட்டம் உள்ள இடம். இங்கே மக்கள் திரள்என்பதாயிற்று. “என்னும் குறளில் ‘கோட்டி’ என்பது அவை என்னும் பொருள்படல் அறிக. (குறள் 401). 31 பரிசிலர் பரிசில் பெறாதுள்ள நகரின் நிலை காணல் 2133. | கள்ளை, மா, கவர் கண்ணியன் கண்டிலன்- பிள்ளை மாக் களிறும், பிடி ஈட்டமும், வள்ளைமாக்கள், நிதியும், வயிரியர், கொள்டிள மாக்களின் கொண்டனர் ஏகவே, |
மா - வண்டுகள்; கள்ளை கவர் கண்ணியன் - தேனை உண்கின்ற மலர் மாலையைஅணிந்தவனாகிய பரதன்; வள்ளை மாக்கள் - (அரசனை வாழ்த்திப் பாடும்) மங்கலவள்ளைப் பாடகரும்; வயிரியர் - யாழ் முதலிய இயங்களாற் பாடுகின்றவர்களும்; பிடி ஈட்டமும்- பெண்யானைத் திரளையும்; நிதியும் - செல்வத்தையும்; கொள்ளை மாக்களின் - கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற |