திருடர்களைப் போல; கொண்டனர் ஏக- பரிசிலாகப் பெற்றுக் கொண்டு செல்ல; கண்டிலன் -. பிள்ளை, மா களிறும், பிடியும் என்று பிரித்துக் கன்றும், யானையும், பிடியும் எனவும்பொருள் உரைக்கலாம். வயிரியர் - பாணர் - வாத்திய இசைஞர் என்பது பொருள். அளவறியாதுவாரிக்கொண்டு செல்வது திருடர் இயல்பு. அதனை ஈண்டுப் பரிசிலர்க்கு உவமை ஆக்கினார். 32 அந்தணர் தானம் பெறாத நிலை கண்டு இரங்குதல் 2134. | காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் - ஆவும், மாவும், அழி கவுள் வேழமும், மேவு காதல் நிதியின் வெறுக்கையும், பூவின் வானவர் கொண்டனர் போகவே. |
காவல் மன்னவன் - (உலகத்தைக் ) காத்தலைச் செய்கிற தயரத மன்னவனது; கான்முளை - வழித் தோன்றலாகிய பரதன்; பூவின் வானவர் - மண்ணுலகத் தேவர்கள்ஆகிய பூசுரர் எனப் பெறும் வேதியர்; ஆவும் - பசுக்களும்; மாவும் - குதிரைகளும்;கவுள் அழிப் வேழமும் - கன்னத்தில் மதம் பெருகுகின்ற யானையும்; காதல் மேவு -ஆசை பெருகுகின்ற; நிதியின் வெறுக்கையும் - செல்வத்தின் மிகுதியும்; கொண்டனர்போக - தானமாகப் பெற்றுக்கொண்டு செல்ல; கண்டிலன் -. கான்முளை - மகனைக் குறிக்கும் சொல்; தந்தையின் காலில் முளைத்தவன் என்பது பொருள்ஆதலின் வழித்தோன்றல் என உரை கூறப்பட்டது. அழிதல் - பெருகுதல் என்னும் பொருட்டு “அழியும்புனல் அஞ்சன மா நதியே” என்னும் சிந்தாமணியில் அப்பொருளாதல் (சீவக. 1193) காண்க. ‘ஏ’ஈற்றசை. 33 இசையில்லாத அயோத்தி நகரம் 2135. | சூழ் அமைந்த சுரும்பும், நரம்பும், தம் ஏழ் அமைந்த இசை இசையாமையால், மாழை உண் கண் மயில் எனும் சாயலார் கூழை போன்ற, பொருநர் குழாங்களே. |
பொருநர் குழாங்கள் - பாடி ஆடுகின்ற பொருநர் கூட்டங்களில் உள்ள; சூழ் அமைந்த கரும்பும் - (மணம்உள்ளவிடத்தே) சுற்றுதல் பொருந்திய வண்டுகளும்; நரம்பும் - நரம்பினால் இசைக்கும்யாழ் முதலிய கருவிகளும்; ஏழ் அமைந்த - ஏழாகப் பொருந்திய; தம் இசை இசையாமையால் - தமக்குரிய இசையை ஒலிக்காமல் வெறுமனே கிடக்கிறபடியால்; மாழைஉண்கண் மயில் எனும் சாயலார் - இளமைத் |