தன்மையாகிய அறியாமையுடைய மையுண்ட பார்வையுடையவரும் மயிலைப் போலும் சாயலுடையவரும் ஆயமகளிர்; கூழை - தலைக் கூந்தலை; போன்ற - போன்றன. கூந்தல் கருநிறம் உடையது. நரம்பு போலும் தோற்றம் உடையது. இசை இசைக்காது - இசைஇசையாத கருநிறம் உடைய வண்டுகளும், நரம்புடைய யாழும் அது போன்றன என்றார். ஏழ் அமைந்தஇசை, குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் எழுவகைச் சுரத்தானங்கள், ச ரி க ம ப த நி எனலும் ஆம். மாழை - இளமை என்னும் பொருட்டு. அது இளமைத்தன்மையாகிய அறியாமையைக் குறித்தது. “மாழை மான் மட நோக்கி உன் தோழி” (திவ்வியப்.1418) என்பது இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. ‘ஏ’ ஈற்றசை. 34 இயக்கம் இன்மையால் அழகு இழந்த வீதிகள் 2136. | தேரும், மாவும், களிறும், சிவிகையும், ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால், யாரும் இன்றி, எழில் இல; வீதிகள், வாரி இன்றிய வாலுக ஆற்றினே, |
தேரும் - தேர்களும்; மாவும் - குதிரைகளும்; களிறும் - யானைகளும்; சிவிகையும் - பல்லக்குகளும்; ஊரும் பண்டியும் - (மக்கள்) ஏறிச்செல்லுகின்ற வண்டிகளும்; ஊருநர் இன்மையால் - ஏறிச் செல்பவரும் செலுத்துபவரும் இன்மையால்; வீதிகள் - (அயோத்திநகரின் ) தெருக்கள்; வாரி இன்றிய -நீர்வருவாய் இல்லாது போன; வாலுக ஆற்றினே - வெண்மணற் பரப்பையுடைய ஆற்றைப் போல;யாரும் இன்றி- இயங்குபவர் எவரும் இல்லாமல்; எழில் இல - அழகு இழந்தன. நீரற்ற வெறுமணல் பரவிய நதி - இயக்கம் அற்ற வீதிகளுக்கு உவமை ஆயிற்று; உவமையணி.வாலுகம்- வெண்மணல். வாரி - வருவாய். யாற்றுக்கு வருவாய் நீர் ஆதலின் நீர் எனப் பொருள்உரைத்தாம். வீதிக்கு அழகு மக்கள் இயங்குதல் ஆகலின் யாரும் இயங்காத வீதிகள் அழகிழந்தன என்றார். ‘ஏ’ ஈற்றசை. 35 நகரை நோக்கிய பரதன் வினா 2137. | அன்ன தன்மை அக நகர் நோக்கினள், பின்னை, அப் பெரியோர்தம் பெருந்தகை, ‘மன்னன் வைகும் வளநகர் போலும் ஈது? என்ன தன்மை? இளையவனே!’ என்றான். |
அப் பெரியோர்தம் பெருந்தகை- அறிவு ஒழுக்கங்களாற் சிறந்த பெரியோர்களாற் போற்றப்படும் பெருமையுடைய குணத்தாற் |