பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 497

மராமரம்- ஓங்கி வளர்ந்த மராமரமானது;  மறிந்து மண் உற்றென்ன -
ஒடிந்து  மண்ணிலே விழுந்ததுபோல; நெடிது வீழ்ந்தனன் - நீண்டு
விழுந்த; அறிந்திலன் - அறிவு கெட்டு; உயிர்த்திலன் - மூச்சற்றவனாய்க்
கிடந்தான்.

     இடியேறுண்ட மராமரம் கைகேயி சொற்கேட்டு வீழ்ந்த பரதனுக்கு
உவமை ஆயிற்று, அசனி -இடி-இடிஏறு என்பது ஆண்மை  மிக்க இடி
எனப்பெறும்;  அஃதாவது  பேரிடி. ‘ஏ’ ஈற்றசை.                    45

பரதன் தாயைக் கடிந்து பேசுதல்  

2147.வாய் ஒளி மழுங்க, தன் மலர்ந்த தாமரை
ஆய் மலர் நயனங்கள் அருவி சோர்தர,
 ‘தீ எரி செவியில் வைத்தனைய தீய சொல்,
நீ அலது உரைசெய நினைப்பார்களோ?;’ என்றான்

     (பரதன் தேறி) தன் வாய் ஒளி மழுங்க - தன் முகவொளி  மங்கிப்
போகவும்; மலர்ந்த தாமரை ஆய் மலர் நயனங்கள் - அன்றலர்ந்த
தாமரையின் ஆராய்ந்த அழகுமலர் ஆகியகண்கள்; அருவி சோர்தர -
நீரை அருவியாகச் சொரியவும்; (தாயை நோக்கி) ‘செவியில் - காதுகளில்;
எரிதீ வைத்த அனைய தீய சொல் - எரிகின்ற நெருப்பைவைத்தது
போன்ற கொடுஞ் சொற்களை; உரைசெய - பேசுதற்கு; நீ அலது - நீ
அல்லாமல்;  நினைப்பரோ? - (பிறர்) நினைப்பார்களோ?;’ என்றான்-.

     கைகேயியின் கல்நெஞ்சு ‘வருத்தல் நீ’ என்ற (2145) உரையால்
வெளிப்படுதலின், நீ அலதுபிறர் உரைசெய்ய நினையவும் மாட்டார்;
பேசுவது எங்ஙனம் என்றான். கைகேயிநினைத்ததோடன்றிப் பேசவும்
செய்தனள் என்ற அவள் கொடுமையை ‘நினைப்பரோ’ என்ற பரதன்வினா
புலப்படுத்தியது. ‘ஓ’ வினாப்பொருட்டு; ‘நினையார்’ என்பது  விடை.     46

துயர் மிகுதியால் பரதன் புலம்புதல்  

2148.எழுந்தனன், ஏங்கினன்; இரங்கிப் பின்னரும்
விழுந்தனன்; விம்மினன்; வெய்து உயிர்த்தனன்;
அழிந்தனன்; அரற்றினன்; அரற்றி, இன்னன
மொழிந்தனன், பின்னரும் - முருகன் செவ்வியான்;

    முருகன் செவ்வியான்- முருகனை ஒத்த பேரழகு உடைய பரதன்;
ஏங்கினன் எழுந்தனன்
- (விழுந்து கிடந்ததரையில் இருந்தும்) ஏக்க முற்று
எழுந்து;  இரங்கி - மனம் வருந்தி; பின்னரும் விழுந்தனன் - மீண்டும்
கீழ்விழுந்து;  விம்மினன் - மனம் பொருமித் துடித்து; வெய்து
உயிர்த்தனன்
 வெப்பமாகப் பெருமூச்சு விட்டு;  அழிந்தனன் -