மனம் கெட்டு; அரற்றினன் - பல படியாகப் பிதற்றலானான்; அரற்றி - புலம்பி; பின்னரும் - பிறகு; இன்னன மொழிந்தனன் - இவ்வாறு பேசலானான். முருகன் - அழகன். முருகு என்னும் சொற்கு அழகு, மணம், இளமை, கடவுள் தன்மை என்னும்நான்கு பொருள் உண்டு. முருகன் மணம் கமழ் தெய்வத்து இள நலம்“ (திருமுருகு 290) உடையன்ஆதலின் பரதனுக்கு உவமையாயினன், ‘இன்னன்’ என்பதனைப் பின்வரும் ஒன்பது செய்யுள்கள் விரிக்கும் . 47 பரதன் தயரதனை நினைத்து முன்னிலைப்படுத்தி அரற்றுதல் 2149. | ‘அறம்தனை வேர் அறுத்து, அருளைக் கொன்றனை, சிறந்த நின் தண்ணளித் திருவைத் தேசு அழித்து, இறத்னை ஆம் எனின், இறைவ! நீதியை மறந்தனை; உனக்கு, இதின் மாசு மேல் உண்டோ? |
‘இறைவ! - தயரத மன்னனே!; அறம்தனை வேர் அறுத்து - தருமத்தை வேரோடேஅழித்து; அருளைக் கொன்றனை - அருளை உயிர் போக்கி; சிறந்த நின் தண் அளித்திருவைத் தேசு அழித்து - உயர்ந்து சிறந்த நின் குளிர்ந்த கருணைச் செல்வத்தை ஒளிகெடுத்து; இறந்தனை ஆம் எனின் - இறந்து பட்டாய் என்றால்; நீதியை மறந்தனை- நீதியை மறந்துவிட்டாய் ஆனாய்; உனக்கு -; இதின் - இதனைக் காட்டிலும்; மாசு- குற்றம்; மேல் உண்டோ - மேம்பட்ட துண்டோ?’ தயரதன் இறந்தபடியால் உலகில் அறம்காப்பார் இல்லாமையால் அறம் கெட்டது. தயரதன்இறப்பே அறம், அருள், ஒளி இவற்றை உலகில் நில்லாதபடி செய்துவிட்டது என்பது இதனாற்கூறியது. எனவே, தயரதன் ஆட்சிச் சிறப்புப் புலப்படுகிறது. “திருவுடை மன்னரைக் காணில்திருமாலைக் கண்டேனே” (திவ்வியப்-3271) என்பராதலின் அரசனை ‘இறைவ!’ என்றான். வள்ளுவரும் ‘இறைமாட்சி’ என்றது காண்க. தயரதன் இறவாதிருந்து இவற்றையெல்லாம் பழித்தாற்போலப் புகழையே கூறினானாம். 48 2150. | ‘சினக் குறும்பு எறிந்து, எழு காமத் தீ அவித்து, இனக் குறும்பு யாவையும் எற்றி, யாவர்க்கும் மனக்கு உறு நெறி செலும் வள்ளியோய்! மறந்து உனக்கு உறு நெறி செலல் ஒழுக்கின்பாலதோ? |
‘சினக்குறும்பு எறிந்து- வெகுளியாகிய பகையை வெட்டி அழித்து; எழு காமத் தீ அவித்து - மனத்தில்தோன்றகின்ற காமம் ஆகிய நெருப்பை அணைத்து; இனக் குறும்பு யாவையும் எற்றி -கூட்டமாக |