பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 501

     பிறருக்கு நிழல் செய்த நீ இப்போது ஒரு நிழலின்கண் இருக்க
விரும்பியது சிறந்ததாகுமாஎன்பது  பரதன் வினாவாகும். உணங்கல் -
வெயிலிற் காய்தல். குடைநிழல் என்பதால் ‘உணங்க’ எனஉபசரிக்கப்பெற்றது.
அறமும் தண்ணளியும் இன்றிக் குடிமக்கள் அல்லற்படுவதை ‘உணங்க’ லாகக்
கொள்க. ‘பல்பகல்’ என்றதை முன் கூறிய “அறுபதினாயிரம் ஆண்டு” (182)
என்றதனால் அறிக. “காதலித்தியோ” என்றது அக்கற்பக நிழலும் சம்பரனைத்
தொலைத்து நீ அளித்த நிழலன்றோஎன்னும் குறிப்பினை உள்ளடக்கியது.
‘மன்னனே!’விளி.                                             52

2154.‘இம்பர் நின்று ஏகினை; இருக்கும் சார்பு இழந்து,
உம்பர் வந்து உன் கழல் ஒதுங்கினார்களோ?
சம்பரன் அனைய அத் தானைத் தானவர்,
அம்பரத்து இன்னமும் உளர்கொலாம்? - ஐயா!

     ஐயா! - ஐயனே!; சம்பரன் அனைய - சம்பராசுரனைப் போன்ற
அத்தகைய; தானைத் தானவர் - வேனையை உடைய அசுரர்கள்;
அம்பரத்து - விண்ணுலகத்து; இன்னமும் உளர் கொலாம் - இப்போதும்
இருக்கின்றார்கள் போலும்; (அதனால்) உம்பர் -தேவர்கள்; இருக்கும்
சார்பு இழத்து
- (அசுரர்கள் தொல்லையால்) தாம் இருக்கும்விண்ணுலக
இடத்தை அவர்கள்பால் இழந்து;  வந்து - மண்ணுலகத்தில் அயோத்திக்கு
வந்து; உன்கழல்- உன்னுடைய கழல் அணிந்த திருவடிக் கீழ்;
ஒதுங்கினார்கொல் - சரணடைந்து தங்கினார்களோ?; (அதனால்தான்)
இம்பர் நின்று - இவ்வுலகத்திருந்து;  ஏகினை- விண்ணுலகம்
சென்றனையோ?

     தேவர்களுக்குப் பகைவர் அசுரர்; அசுரர்கள் வலியுடையராயின்
அவர்களை அழிக்கவலியுடையாரைச் சரணடைதல் தேவர் வழக்கம்.
முன்னம் சம்பராசுரனை ஒழித்துத் தேவருலகைஇந்திரனுக்கு மீட்டுக்
கொடுத்தான் தயரதன். இப்போதும் விண்ணுலகம் சென்றது அப்படித்
தேவர்களுக்கு உதவி செய்தற்காகப் போலும் என்று சொல்லிப் புலம்பினான்
பரதன்.                                                      53

2155.‘இயம் கெழு தானையர் இறுத்த மாத் திறை,
உயங்கல் இல் மறையவர்க்கு உதவி, உம்பரின்,
அயம் கெழு வேள்வியோடு, அமரர்க்கு ஆக்கிய,
வயங்கு எரி வளர்க்கலை, வைக வல்லையோ?

     (ஐயா!) இயம் கெழு தானையர் - வாத்தியங்கள் நெருக்கி இருக்கின்ற
சேனையைஉடையவர்; இறுத்த - (உனக்குத் தோற்று) கப்பமாகக் கட்டிய;
மா திறை
-பெரிய திறைப் பொருளை; உயங்கல் இல் - அ வருந்துதல்
இல்லாத; மறையவர்க்கு -வேதம் வல்ல அந்தணார்க்கு; உதவி- கொடுத்து;
உம்பரின் - விண்ணுலகில் உள்ள