பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 507

தெய்வத்தானும் அன்று- ஓர் தெய்வக்குற்றத்தால் அத்தெய்வம்
சீறியதாலும் அன்று; அருக்கனே அனைய
-சூரியனையே ஒத்த (நேர்மை
தவறாத);  அவ் அரசர் கோமகன் - அந்தச்சக்கரவர்த்தியாகிய தயரதன்;
இருக்கவே - உயிருடன் இருக்கின்ற போதே; அவன் வனத்துஏகினான்’-
இராமன் காட்டுக்குச் சென்றான்;’ என்றாள் -.

     முன்பு பரதன் வினாவில் வந்த மூன்று காரணங்களையும் அன்று என
மறுத்தாள் கைகேயி. ‘குருக்களை இகழ்தல்’ -‘தீங்கு இழைத்த அதனினோ’
என்பதுடுனும், ‘ஒருதெய்வத்தால்’ என்பது ‘தெய்வம் சீறியோ’ என்பதுடனும்,
‘செருக்கினால்’ என்பது ‘ஓங்கியவிதியினோ’ என்பதுடனும் பொருந்துமாறு
அறிக.

     வாய்மை தவறாதவன் தயரதன்; தன் உயிர் போய்விடும் என்பது
தெரிந்தும் கைகேயிக்குவாக்குத் தவறாமல் வரம் கொடுத்தவன் ஆதலால்,
‘அருக்கனே அனைய’ என்று தயரதனை இங்குக்கூறினாள். பரதன் கேட்ட
வினாக்களின் அளவே கைகேயி பதில் உரைக்கிறாள்; மேற்கொண்டுதானாக
எதுவும் சொல்லாதில்லை;  ஏன்? பரதன்பால் தான் செய்த செயலை உடன்
தெரிவிப்பதில்எழுந்த அச்சமே ஆகும்.                           63

பரதன் மறுபடியும் கைகேயியை வினாவுதல்  

2165.‘குற்றம் ஒன்று இல்லையேல், கொதித்து வேறு உளோர்
செற்றதும் இல்லையேல், தெய்வத்தால் அன்றேல்
பெற்றவன் இருக்கவே, பிள்ளை கான்புக
உற்றது என்? தெரிதர உரைசெய்வீர்.’ என்றான்.

     ‘குற்றம் ஒன்று இல்லையேல் - இராமன் பிறருக்குச் செய்த தீங்கு
ஒன்றும்இல்லையாக இருக்குமானால்;  வேறு உளோர் கொதித்து
செற்றதும் இல்லையேல்
- இராமனுக்குவேறாக உள்ள பகைவர் மனம்
வெம்பி வலியை அழித்ததும் இல்லையானால்; தெய்வத்தான் அன்றேல்
-
தெய்வக் குற்றத்தினாலும் விளைந்தது இல்லையானால்; பெற்றவன்
இருக்கவே
- தன்னைப்பெற்ற தந்தை தயரதன் உயிரோடிருக்கும் பொழுதே;
பிள்ளை கான் புக உற்றது என் - அவன்மகனாகிய இராமன் காடு
செல்லும்படி நேர்ந்ததற்குக் காரணம் யாது?; தெரிதர - நன்கு விளங்கும்படி;
உரைசெய்வீர்! - சொல்வீராக;’ என்றான் -.

     வேறு எக்காரணமும் இல்லை என்னும்போது தந்தை இருக்கும்போது
மகன் காடுசென்றதனால் பரதன்காரணம் கேட்டு வினாவ வேண்டுவதாயிற்று.
‘பின் அவன் உலந்தது என்’ என்று ஒரு பாடம் ‘தெரிதரஉரை செய்வீர்’
என்ற பகுதிக்கு உண்டு. மகன் காடு சென்ற பின் தந்தையாகிய தயரதன்
இறந்ததற்குக் காரணம் என்ன? என்று பரதன் வினாவினன் என்பர். மகன்
காடு சென்றதேதந்தையின் இறப்புக்குக் காரணமாகிவிடுதலின், வேறு
காரணம் வினாவி அறிய வேண்டுவதின்று என்க.                     64