ஆகும்; ஆகவே, எந்த இராமனைக் காட்டிற்கு அனுப்பினாயோ அவனால் தான் இன்று நீஉயிரோடிருக்கின்றாய் என்றான் பரதன். ‘தாய் எனும் பெயர்’ என்றது தாய் என்பது உனக்குப்பெயரளவில்தான் பொருந்தும்; பொருள் அளவில் அச்சொல்லுக்கு நீ சிறிதும் தகுதியற்றவள்.சொற்கள் பொருள் உணர்த்தும் வழிதான் ஆற்றல் உடையன; பொருள் உணர்த்தாத வழி ஆற்றல்அற்றன. எனவே, உனக்குரிய ‘தாய்’ என்பதும் எனைத் தடுக்கும் ஆற்றல் உடையதன்று என்பதும் ஒருகருத்து. ‘ஓ’ வினாப்பொருட்டு. 72 2174. | ‘மாளவும் உளன், ஒரு மன்னன் வன் சொலால்; மீளவும் உளன் ஒரு வீரன்; மேய பார் ஆளவும் உளன் ஒரு பரதன்; ஆயினால், கோள் இல அறநெறி! குறை உண்டாகுமோ? |
‘ஒரு மன்னன் - ஓர் அரசன் (தயரதன்); வன் சொலால் - (கைகேயியின்வரம் என்ற) கொடுஞ்சொல்லால்; மாளவும் உளன் - தன் உயிரை விடவும் இருக்கிறான்; ஒரு வீரன் - ஓர் ஆண்மகன் (இராமன்); மீளவும் உளன் - தான் ஆள வேண்டிய அரசைவிட்டுக் காடு) செல்லவும் இருக்கிறான்; மேய பார் - (இவ்வாறு வந்து சேர்ந்த)பூமியை; ஆளவும் - ஆட்சிபுரியவும்; ஒரு பரதன்- பரதன் என்ற ஒருவன்; உளன்- இருக்கிறான்; ஆயினால் - இவ்வாறானால்; அறநெறி கோள் இல - தரும வழிகுற்றம் உடையதன்று; சிறந்ததே; குறை உண்டாகுமோ - ஒரு குறையும் உடையதாகுமா?’ இகழ்ச்சிக் குறிப்பாளகக் கொள்க. நடந்தவற்றைக் கூறி நன்று! நன்று! என்று தன்னைத்தானே நகையாடிக்கொண்டான் பரதன். “கைகேயி! தாயே! அம்மா உன் ஏற்பாடு அறநெறிக்குக் கோளேஇல்லாத ஏற்பாடு; இனி அறநெறிக்குக் குறை உண்டாகுமோ” என்று கேட்டாளாம். 73 2175. | ‘ “சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால், வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து, ஒரு பழி உடைத்து ஆக்கினன், பரதன் பண்டு” எனும், மொழி உடைத்து ஆக்கலின் முறைமை வேறு உண்டோ? |
‘சுழிஉடை- வஞ்சனை உள்ள; தாயுடை- தாயாகிய கைகேயினுடைய; கொடிய சூழ்ச்சியால் -தீய புணர்ப்பினால்; வழியுடைத்தாய் வரும் மரபை மாய்த்து - தொன்றுதொட்டு வரும்சூரிய குலப்பரம்பரை வழக்கை மாறுபடுத்தி; பரதன் -; ஒரு பழி உடைத்து - ஒருபழியை உடையதாக; பண்டு - முன்பு; ஆக்கினன்’ - செய்திட்டான்; எனும்மொழி - என்கின்ற பேச்சை; உடைத்து ஆக்கலின் - (பிற்காலத்தில்)பேசும்படியாகச் செய்திடுவதைக் காட்டிலும்; வேறு முறைமை - வேறு ஒழுங்கு (ஏதேனும்); உண்டோ - (நீ செய்த செயலில்) இருக்கிறதா?’ |