பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 523

     ‘அரோ’ ஈற்றசை. ‘மீண்டு’ என்பதை மாறிச் சேர்க்காது.  நேரே
சேர்த்துத் திரும்பவும்மண்கிழிதர வீழ்ந்தான் என்றும் பொருள் கூறலாம்.
இப்பொருளில் வரும்போது பரதன் வந்தவுடன்வீழ்ந்து  வணங்கினான்,
திரும்பவும் கோசலை திருவடியில் வீழ்ந்தான் என்று உரைத்தல்வேண்டும்.
அருகர் - ஈற்றுப் போலி.                                      89

பரதனின் இரங்கல் உரை  

2191.‘எந்தை எவ் உலகு உளான்? எம் முன் யாண்டையான்?
வந்தது, தமியென், இம் மயக்கம் காணவோ?
சிந்தையின் உறு துயர் தீர்த்திரால் எனும்,
அந்தரத்து அமரரும் அழுது சோரவே.

     அந்தரத்து அமரரும் - வானுலகில் உள்ள தேவர்களும்; அமுது
சோரவே
-(இவன் புலம்பைக் கேட்டும் இவனைக் கண்டும் தம்மாலும்
ஆற்றமுடியாமல் தாமும்) அழுது சோரும்படி;‘எந்தை எவ் உலகு
உளான்?
- என் தந்தையாகிய தயரதன் இப்போது  எந்தஉலகத்தில்
இருக்கிறான்?;  எம்முன் யாண்டையான் - என் தமையனாகிய இராமன்
எவ்விடத்தில் இருக்கிறான்?; தமியென் - ஆதரவற்ற தனியனாகிய யான்;
வந்தது -அயோத்திக்கு வந்தது;  இம் மறுக்கம் காணவோ? - இந்தத்
துன்ப நிலையைக்காண்பதற்காகவோ?; சிந்தையின் - (என்) மனத்தில்;
உறு துயர் - பொருந்தியதுன்பத்தைத்; தீர்த்திர்- போக்குங்கள்;’ எனும்-
என்பான்.

     இறந்தபின் வேறு உலகம் செல்வர் ஆதலான் ‘எந்தை எவ் உலகு
உளான்’ என்றான். இராமன்காடு சென்றபடியால் ‘யாண்டையான்’ அதாவது
காட்டில் எவ்விடத்தில் உள்ளான் என்றான்.தந்தையோடும் தமையனோடும்
இருக்கின்ற பேறு பெறாமையால் தன்னைத் ‘தமியென்’ என்றுகுறிப்பிட்டான்.
‘ஆல்’, ‘ஏ’ அசைகள்.                                          90

2192.‘அடித்தலம் கண்டிலென் யான், என் ஐயனை;
படித்தலம் காவலன், பெயரற்பாலனோ?
பிடித்திலிர் போலும் நீர்; பிழைத்திரால்’ எனும் -
பொடித் தலம் தோற் உறப் புரண்டு சோர்கின்றாள்.

     தலம் பொடி தோள் உறப் புரண்டு சோர்கின்றான் - மண்ணில்
உள்ள புழுதிதன்தோளிற் படும்படி நிலத்திற் புரண்டு மனம் சோர்ந்தவனாகி;
‘யான் -; என் ஐயனை- என் தலைவனாகிய இராமனது;  அடித்தலம் -
திருவடியை;  கண்டிலென் - காணப்பெறவில்லை;படித்தலம் காவலன் -
இப்பூமியாகிய இடத்துக்கு அரசனாகிய இராமன்; பெயரற்பாலனோ?-
இக்கோசல நாட்டைவிட்டுப் பெயர்ந்து செல்லும் தன்மை உடையனோ; நீர்-
(அன்னையாகிய) நீர் (ஆற்றாமையால்); பிடித்திலிர் போலும் - (அவன்
கானகம்செல்லும்போது)