பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 525

     சூரியகுலமாதலின் இங்ஙனம் கூறினான். தன்னைத் தானே நொந்து
கொள்வது பரதன் இயல்பு.‘புகழ் படைத்த சூரியகுலம் பழியையும் படைத்தது
என்னால்’  என்பது பரதன் துயர் மொழி.‘மரகத’ என்பது செய்யும் எதுகை
நோக்கி ‘மரதக’ என எழுந்து  முன்பின் ஆயது. ‘ஆல்’ அசை.         93

2195.‘வாள்தொடு தானையான் வானில் வைகிட,
காடு ஒரு தலைமகன் எய்த, கண் இலா
நாடு ஒரு துயரிடை நைவதே’ எனும் -
தாள் தொடு தடக் கை அத் தருமமே அனான்.

    தாள்தொடு தடக்கை அத்தருமமே அனான்- முழந்தாளைத்
தொடுமாறு நீண்ட கைகளை உடைய முழுமுதலாகிய அறத்தினைப் போன்ற
பரதன்;  ‘வாள் தொடு தானையான்
- வாள் ஏந்திய சேனைகளை உடைய
தயரதன்; வானில் வைகிட- வானுலகத்தில் தங்கியிருக்க; ஒரு தலைமகன்-
அவனது (அரசுக்குரிய);  ஒப்பற்றமூத்த மகன்;  காடு எய்த - காட்டை
அடைய, (அரசு புரிவார் இன்மையால்); கண்இலா நாடு - துன்பம்
நீக்குதற்குரிய களைகண் ஆனவரைப் பெறாத நாடு; துயரிடை -
துன்பத்தில்பட்டு;  நைவதே - வருந்துவதே;  எனும் - என்று சொல்லிப்
புலம்பும்.

     தயரதனும் இராமனும் நாட்டிற்குக் கண் போல்வார் ஆதலின் அவரை
இழந்த நாடு ‘கண் இலாநாடு’ ஆம். முழந்தாள் அளவு நீண்ட கை
அரசர்க்குரிய உத்தம இலக்கணம். ‘தாழ்தடக் கைகளே’(2104) என்றதை
இங்கு ஒப்புநோக்குக.                                           94

கோசலை, பரதன் தூயன் என அறிந்து உரை தொடங்குதல்  

2196. புலம்புறு குரிசில்தன் புலர்வு நோக்கினாள்,
குலம் பொறை கற்பு இவை சுமந்த கோசலை;
‘நிலம் பொறை ஆற்றலன், நெஞ்சம் தூய்து’ எனா,
சலம் பிறிது உற, மனம் தளர்ந்து, கூறுவாள்;

     குலம், பொறை, கற்பு இவை சுமந்த கோசலை - உயர்ந்த குடிப்
பிறப்பும்,பொறுமையும், கற்பும் ஆய இவற்றை நல் அணிகலன்களாகச்
சுமந்துகொண்டுள்ள கோசலை; புலம்புஉறுகுரிசில்தன்
- துயரதம்
அடைகின்ற பரதனது; புலர்வு - துயர்ச்சோர்வினை; நோக்கினாள் -
மனத்தால் ஆராய்ந்தாள்; ‘நிலம் பொறை - (இந்தக்), கோசலஅரசைச்
சுமக்கின்ற ஆட்சி உரிமையை;  ஆற்றலன் - விரும்பியவன் அல்லன்;
நெஞ்சம் தூய்து - இவன் மனம் தூய்மையானது; எனா - என்று  கருதி;
சலம் -(இதுகாறும் அவனைப்பற்றித் தான்கொண்டிருந்த) தவறான கருத்து;
பிறிது உற - (இப்போது)வேறுபட்டுப் போக; மனம் தளர்ந்து -
(இப்படிப்பட்ட நல்லவனை மாறாகக் கருதினோமே