பக்கம் எண் :

526அயோத்தியா காண்டம்

என்பதனால்) மனம் சோர்ந்து; கூறுவாள் - சொல்பவள் ஆனாள்.

     கைகேயி போலப் பரதனும் அதற்கு உடன்பட்டவன் என்றுமுன்னர்க்
கருதியவள் ஆதலின், அக்கருத்தைச் ‘சலம்’ என்று குறித்தார். ‘சலம்’ தீது,
வஞ்சனை, பொய் என்று பொருள்படும். புலர்வு - வாடிக்காய்தல்.
கோசலைக்குப் பரதன் நிலை கண்டுமனத்தளர்வு ஏற்பட்டது எனலாம்.   95

கோசலை பரதனை வினாவுதல்  

2197.‘மை அறு மனத்து ஒரு மாசு உளான் அலன்;
செய்யனே’ என்பது தேறும் சிந்தையாள்,
‘கைகயர் கோமகள் இழைத்த கைதவம்,
ஐய! நீ அறிந்திலை போலுமால்?’ என்றாள்.

     (இவன்) மை அறு - இயல்பாகவே குற்றம் அற்ற மனத்தின்கண்; ஒரு
மாசுஉளான் அலன்
- (கைகேயியால் ஏற்பட்ட ஒரு குற்றமும் உடையவன்
அல்லன்; செய்யன் - வேர்மையானவன்; என்பது தேறும் சிந்தையாள் -
என்பது தெளிந்த மனத்தினன்ஆனாள், (பின்னர்ப் பரதனைப் பார்த்து);
‘ஐய!- ஐயனே; நீ கைகயர் கோமகள்- கேகய நாட்டு அரசமன் மகளாகிய
கைகேயி; இழைத்த கைதவம் - செய்த வஞ்சனை; அறிந்திலை போலும்’-
(முன்னமே) அறியாய் போலும்; என்றாள். -.

     முன்பு மாசு உள்ளானோ என்று கோசலை ஐயுற்றாள் என்பதை
மேற்பாட்டில் (2196)  ‘சலம் ’என்று  குறித்துள்ளார்.  இங்கே ‘செய்யனே’
என்பது
தெளிந்தாளாம். ‘ஐய’ என்பதுஉள்ளன்பினால் ‘தலைவ’ என
அழைத்தாளாம். கைகேயி அல்லது உன் தாய் என்னாமல் கைகயர்கோமகள்
என்றழைத்தது அவள் அரசின்கண் ஆசைப்பட்டதற்குக் காரணம் சொன்னது
போலத்தோற்றிநயம் செய்கிறது. ‘ஆல்’ அசை. ‘செய்யனே’ ‘ஏ’ காரம்
தேற்றம்.                                                     96

கோசலை சொல்லால் மனப்புண் உற்ற  
பரதன் சூள் உரைக்கத் தொடங்குதல்  

2198.தாள் உறு குரிசில், அத் தாய் சொல் கேட்டலும்,
கோள் உறு மடங்களில் குமுறி விம்முவான்,
நாள் உறு நல் அறம் நடுங்க, நாவினால்
`சூளுறு கட்டுரை சொல்லல் மேயினான்;

     தாள் உறு குரிசில் - சோசலையின் திருவடிகளில் வீழ்ந்த பரதன்; அத்
தாய் சொல்கேட்டலும் - அந்தத் தாயின் (கைகேயி செய்த வஞ்சனை
அறியாயோ என்ற) சொல்லைக் கேட்டஅளவில்; கோள்