உறு மடங்கலின்- சிறைபிடிக்கப்பட்ட சிங்கம் போல; குமுறி விம்முவான்- மனக்குமுறல் அடைந்துஅழுவான்; நாள்உறு நல் அறம் நடுங்க - காலக் கடவுளொடும் பொருந்தி அவர் அவர்க்குப்பயன் செய்யும் நல்ல அறக்கடவுளும் நடுங்கும்படியாக; நாவினால் - தனது வாயால்; சூளுறு கட்டுரை - சபதமாக ஏற்றுக்கொள்ளப்படும் உறுதி மொழிகளை; சொல்லல் மேயினான் - சொல்லத் தொடங்கினான். பரதனின் மனவேதனையைத் தட்டி எழுப்பியது கோசலை கேட்ட வார்த்தை. அதனால், புண்பட்டமனம் குமுறிப் பொங்கியது; சபதம் சொல்லத் தொடங்கினான். அது கேட்டு அறமே நடுங்குகிறதுஎன்றார். ‘நாவினால்’ என்றது சத்திய வாக்கினன் என்ற அவன் சொல் தூய்மையைச் சிறப்பித்து நின்றது. இதனை வடிமொழியில் ‘தாற்பரியம்’ என்ப. ‘ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய,வழுக்கியும் வாயாற் சொலல்” என்னும் குறளில் (139) ‘வாயால்’ என்பது போல் வந்தது.‘அன்பிலதனை அறம்” (குறள் 77) காய்தல் வழக்கு, தண்டம் செயும் ஆற்றல் உடைய அறமும்நல்லோந் செய்யும் சூளுரைக்கு நடுங்குகிறது என்றார். அறக்கடவுளின் தண்டம் காலத்தோடு பட்டுநிகழும் ஆதலின் ‘நாள் உறு நல்லறம்’ எனப்பெற்றது. நாள் என்றது காலத்தைக் குறிக்கும்ஆகுபெயர். 97 பரதன் செய்த சூளுரை 2199. | ‘அறம்கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன், பிறன்கடைநின்றவன், பிறரைச் சீறினோன், மறம்கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன், துறந்த மா தவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துளோன், |
‘அறம் கெட முயன்றவன்- (பிறர் செய்த) அறச் செயல் கெடும் படி முயற்சிசெய்தவன்; அருள் இல் நெஞ்சினன் - இரக்கம் அற்ற மனம் உடையவன்; பிறன் கடைநின்றவன் - தொழில் செய்து பொருள்தேடாது அயலார் வீட்டு வாயிற்படியில் எளிவரவாய்நின்றவன்; பிறரைச் சீறினோன் - (ஒரு காரணமும் இல்லாமல்) பிறரைக் கோபித்துக்கெடுதி செய்தவன்; மறம் கொடு மன்னுயிர் கொன்று வாழ்ந்தவன் - இரக்கமற்ற மறக்கொடுமை கொண்டு நிலைத்த உயிர்களைக் கொன்று அதனால் தன் வாழ்க்கை நடத்தியவன்; துறந்த மாதவர்க்கு அருந்துயரம் சூழ்ந்துளோன் - துறவிகளாய பெரிய முனிவர்களுக்குப்பொறுத்தற்கரிய துயரத்தை வேண்டுமென்றே செய்தவன்...... ஆகிய இவர்கள் ‘நண்ணும் அத் தீ எரி நரகத்துக் கடிது செல்கயான்’ எனப் பரதன் உரைப்பதாக இது முதல் நான்கு செய்யுள்கள் ஒரு தொடராக இருந்து. இப்படலத்து101 ஆம் பாடலின் இறுதி அடியில் (2202) முடிகின்றன. ‘எனக்குத் தெரிந்து கைகேயி செய்தவஞ்சனை நடந்திருக்குமாயின் யான் இத்தகையோர் செல்லும் நரகு செல்வேனாக’ என்று மனத்தின்அடித்தளத்தில் இருந்து இச்சபதங்கள் குமுறி எழுகின்றன. பிறன்கடை நின்றவன் - பிறன் மனைவியை நயந்து அந்த வீட்டவாயிலின் அருகே சென்று நின்றவன் எனவும் உரைக்கலாம். ‘அறன் கடைநின்றாருள் எல்லாம் பிறள்கடை, நின்றாரிற் |