பக்கம் எண் :

528அயோத்தியா காண்டம்

பேதையார் இல்’ (குறள். 142) என்னும் குறளையும் கருதுக.  ‘நட்பிடைக்
குய்யம் வைத்தான்பிறர்மனை நலத்தைச் சார்ந்தான்,.......அட்டுகுடலம்
தின்றான்....குட்டநேராய் நரகம்தன்னுட் குளிப்பவர் இவர்கள் கண்டாய்’
என்னும் சிந்தா மணிப்பாடலை இங்கு ஒப்பு நோக்குக.முற்றும் துறந்த
முனிவர்க்குச் சீற்றமும் இல்லையாதலின் சாபத்தில் தப்புவர் ஆயினும்
நரகத்தில் தப்பார் என்க.                                        98

2200.‘குரவரை, மகளிரை, வாளின் கொன்றுளோன்,
புரவலன் தன்னொடும் அமரில் புக்கு உடன்
விரவலர் வெரிநிடை விழிக்க, மீண்டுளோன்,
இரவலர் அரு நிதி எறிந்து வௌவினோன்,

    குரவரை- ஐம்பெருங் குரவரை;  மகளிரை - பெண்களை;  வாளின்
கொன்றுளோன் - வாளால் கொலைசெய்தவன்; புரவலன் தன்னொடும் -
அரசனோடும்; அமரில் புக்கு- போர்க்களத்துக்குச் சென்று; உடன்- உடனே;
விரவலர் வெரிநிடை  விழிக்க - பகைவர்கள் தன்முதுகிடத்தைக் காண;
மீண்டுளோன் - திரும்பி ஓடிவந்தவன்; இரவலர் -ஏற்றுண்பாரது;
அருநிதி - அரிதாகச் சேமித்த  செல்வத்தை; எறிந்து வௌவினேன் -
அவர்களை அடித்துக் கைப்பற்றிக் கொண்டவன்...

     ஐம்பெருங்குரவர் ஆவார் - தந்தை, தாய், தம்முன், அரசன்
ஆசிரியன் என்போர்.(ஆசாரக். 16) குரவர் - ஆசிரியர் என்று ‘குரு’ வை
மட்டும் கூறுதலும் உண்டு. போர்க்கு அரசனுடன்சென்று புறமுதுகிட்டு
ஓடிவந்து அரசனைக் கைவிட்டவன். இவனை வள்ளுவர் ‘அமரகத்து
ஆற்றறுக்கும்கல்லாமா அன்னார்’ என்று  சொல்வர் (குறள். 814.).      99

2201. “தழைத்த தண் துளவினோன்
     தலைவன் அல்லன்” என்று
அழைத்தவன், அறநெறி
     அந்தணாளரில்
பிழைத்தவன், பிழைப்பு இலா
     மறையைப் பேணலாது,
”இழைத்த வன் பொய்” எனும்
     இழுதை நெஞ்சினோன்.

    “தழைத்த- செழித்துள்ள; தண் துளவினோன்- குளிர்ச்சி பொருந்திய
திருத்துழாய் மாலையைச்சூடியுள்ள திருமால்; தலைவன் அல்லன்”
-
பரம்பொருள் அல்லன்; என்று அழைத்தவன் - என்று சொல்லியவன்;
அறநெறி - தரும வழியில் நடக்கின்ற; அந்தணாளரில்பிழைத்தவன் -
அந்தணாளர் திறத்தில் பிழைசெய்தவன்; பிழைப்பு இலா இறையைப்
பேணலாது
- ஒரு சிறிதும் குற்றம் இல்லாத இறைவன் அருளிய வேதத்தை
நன்கு வழிபட்டுப் பாதுகாவாது;  “இழைத்த