பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 529

வன் பொய்” - ஒருவர் செய்துவைத்த பொய்யுரை; எனும் இழுதை
நெஞ்சினோன்
- என்று சொல்லும்பேய்மனம் படைத்தவன்....

     ‘திருமாலே பரம்பொருள்’ என்னும் கருத்தை நிலைநிறுத்தப் பரதன்
சபதத்தில் அதனையும்ஒன்றாக்கினார் போலும். வேதம் ஒருவனால்
உண்டாக்கப்பட்டதன்று; ‘அபௌருஷேயம்’ என்பர்வடநூலார்; இறைவே
அருளியது. அதைப் பொய் என்பவன் பேய் என்றார். “உலகத்தார்
உண்டென்பதில்லென்பான் வையத்தலகையா வைக்கப்படும்” (குறள் 850)
என்பதும் இக்கருத்தினதாதல் அறிக.                             100

2202.‘தாய் பசி உழந்து உயிர் தளரத், தான் தனி,
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்,
நாயகன் பட நடந்தவனும், நண்ணும் அத்
தீ எரி நரகத்துக் கடிது செல்க, யான்.

     ‘தாய் பசி உழந்து  உயிர்தளர - தன் தாய் பசியால் வருந்தி உயிர்
சோரவும்;தான் -;  தனி பாய் பெரும் பாழ் வயிறு - ஒப்பற்ற பரந்த
பெரிய பாழ்வயிற்றை; அளிக்கும்  பாவியும் - (சோறிட்டுப்) பாதுகாக்கின்ற
பாவி;  நாயகன் பட நடந்தவன்- தன் தலைவன் போர்க்களத்திலே
இறந்துபட அவனைக் கைவிட்டுத் தன்னுயிரைக் காத்துக் கொண்டு
சென்றவன்; (ஆகிய இப்பதினான்கு பேரும்); நண்ணும் அத் தீ எரி
நரகத்து
- எந்தநரகத்துக்குச்  செல்வார்களோ அந்த நெருப்பு எரிகின்ற
நரகத்துக்கு; யான் கடிது செல்க- யான் (அவரினும்) விரைந்து முற்படச்
செல்வேனாக.

     தாய் பசி நீக்க எதையும் செய்யலாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு
உடன் களைய வேண்டுவது தாய் பசி ஆகும். ‘ஈன்றான் பசி காண்பான்
ஆயினும்” (குறள். 656.) என்றது காண்க. “தாயர்பசி கண்டு நனி தன் பசி
தணிக்கும்,  நாயனைய புல்லர் உறு நாகில் உறுவேன்” (வில்லி. 41.182.)
என்றதும் இக் கருத்தினதே.

     ‘தீ எரி நரகம்’ ஒருவகை நரக விசேடம்.  நான்கு பாடல்களால்
பதினான்கு பேரைச் சுட்டி‘அவர்கள் செல்கின்ற நரகத்துக்கு யானும்
செல்க - கைகேயி எனக்குத் தெரிந்து வரம்கேட்டாளாயின்’ என்று பரதன்
கூறினான்.  பின்வரும் பாடல்களும் இவ்வாறே ஆகும்.             101

2203.‘தாளினில் அடைந்தவர்தம்மை, தற்கு ஒரு
கோள் உற, அஞ்சினன் கொடுத்த பேதையும்,
நாளினும் அறம் மறந்தவனும், நண்ணுறும்.
மீள அரு நரகிடைக் கடிது வீழ்க, யான்.

    ‘தாளினில் அடைந்தவர் தம்மை - (என்னைப் பாதுகாக்க வேண்டும்
என்று சொல்லித்) தன்னடியில் அடைக்கலமாக - வந்து சேர்ந்தவர்களை;
தற்கு ஒரு கோள் உற - (அவர்களக்கு அடைக்கலம் அளித்ததனால்)
தனக்கு ஒரு தீங்கு உறலாயிருக்க அதற்கு அஞ்சியவனாய் எதிரி கையில்