| மைந்தரைக் கொன்றுளோன், வழக்கில் பொய்த்துளோன், நிந்தனை தேவரை நிகழ்த்தினோன், புகும் வெந் துயர் நரகத்து வீழ்க, யானுமே. |
‘அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்- வேதம் வல்ல மறையோர் வசிக்கின்ற இடத்தை நெருப்பை உண்ணும்படி செய்தவன் (தீ வைத்தவன்);மைந்தரைக் கொன்றுளோன் - சிறுவரைக் கொன்றவன்; வழக்கில் பொய்த்துளோன் -(இருவர் வழக்குத் தம்மிடம் நியாயத்துக்கு வந்தவழி) வழக்கில் பொய்த்தீர்ப்புச் செய்தவன்;தேவரை நிந்தனை நிகழ்த்தினோன் - தெய்வங்களை வைது உரைத்தவன் (ஆகிய இவர்); புகும் வெந்துயர் நரகத்து யான் வீழ்க - செல்லும் அக் கொடிய துன்பத்தைத் தரும்நரகத்தில் யான் வீழ்வேனாக.’ வாழும் இடத்துக்குத் தீவைத்தலே பாதகம். அதன் மேலும்அந்தணர் வசிக்கும் இடத்துக்கும் தீ வைத்தல்மாபாதகம். சிறுவரைக் கொல்லுதல்; பெற்றபிள்ளைகளைக் கொல்லுதலும் ஆம்..பொய்க்கரி கூறினோன் என்று முன்னர் வந்ததுசாட்சியாளர்க்கு; இது நடுவர்க்கு; இனி வாதி, பிரதிவாதி இருவருள் ஒருவர் பொத்தலும் இங்கே கொள்ளலாம். ‘யானும்’ என்ற உம்மை எச்ச உம்மை. 104 2206. | ‘கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன், மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன், நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன், என்று இவர் உறு நரகு என்னது ஆகவே.* |
‘கன்று உயிர் ஓய்ந்து உகப் பால் கறந்து உண்டோன் - (பால் விடாமையால்)கன்றுக்குட்டி உயிர் இல்லையாய்ப் போக (பசுவினிடத்து) எல்லாப் பாலையும் (தானே) கறந்து உண்டவன்; மன்றிடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன் - மன்றத்தில் பிறரதுபொருளை (அவர் அறியாதபடி) மறைத்துக் கைப்பற்றிக் கொண்டவன்; நன்றியை மறந்திடும் நயம்இல் நாவினோன் - (ஒருவன்) செய்த நன்றியை மறந்து (அவனைப் பழித்துரை செய்யும்)இனிமையற்ற நாக்கை உடையவன்; என்று இவர் உறு நரகு என்னது ஆக - என்று கூறப்பெறுகின்றஇந்த மூவரும் சென்றடையும் நரகம் எனக்கும் சொந்தமாகட்டும்.’ தனக்கும் கன்றக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப்பாலை இறைவன் அளித்திருப்பவும் கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல் தானே கறந்து அநுபவித்தல்பாதகம் ஆயிற்று. பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்துக் கைப்பற்றல் அறமற்றசெயல். நயமில் நாவினோன் தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன். ‘ஏ’ காரம்ஈற்றசை. 105 |