‘உயிர் வளர்த்து உண்ணும் ஆசையால்’ என்பதனை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, ‘எஃகு எறி செருமுகத்து’ என்பதன் முன்னும் கூட்டிப் பொருள் செய்யலாம். -இது இடைநிலை விளக்கணி என்றும், தாப்பிசைப் பொருள்கோள் என்றும் கூறப்பெறும்.‘கொள்பொருள் வெஃகிக் குடி அலைக்கும் வேந்தன்” (திரிகடுகம் 50) எனக் கூறுவர் இம்மன்னனை. 107 2209. | ‘அழிவு அரும் அரசியல் எய்தி, ஆகும் என்று, இழி வரு சிறு தொழில் இயற்றி, ஆண்டு, தன் வழி வரு தருமத்தை மறந்து, மற்று ஒரு பழி வரு நெறி படர் பதகன் ஆக, யான். |
‘அழிவு அரும் அரசியல் எய்தி- கெடுதல் இல்லாத அரசாட்சியை அடைந்து’ ஆகும் என்று - (எனக்கு) எதுவும் செய்ய இயலும்என்று கருதி; ஆண்டு - அரசாட்சி நடத்தி; தன் வழிவரு தருமத்தை மறந்து - தன்னுடைய பாரம்பரியமான குலதருமத்தை மறந்து (கை விட்டு); மற்று - வேறாகிய; ஒருபழிவரு நெறி - தனக்குப் பழி வந்து சேரக் கூடிய வழியில்; படர் - விரித்துசெல்கின்ற; பதகன் - பாவியாக; யான் ஆக - யான் ஆவேனாக.’ அரசேற்றவன் அறவழியில் நடக்க வேண்டும்; வேறு வழியில் சென்றால் பாவியாகிறான்; அவனைப்போல நானும் ஆவேனாக என்று பரதன் சூளுரை செய்தான். 108 2210. | ‘தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் எஞ்சல் இல் மறுக்கினோடு இரியல் போயுற, வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீக் கொள அஞ்சின மன்னவன் ஆக யானுமே. |
யான் -; தஞ்சு என ஒதுங்கினர் தனது பார் உளோர் - (நீயே எமது) அடைக்கலம்எம்மைப் பாதுகாக்க என்ற தன்னிடத்தில் வந்து அடைந்த தன் குடிமக்கள்; எஞ்சல் இல்மறுக்கினோடு- குறைதல் இல்லாத (அதிக) மனக் கலக்கத்தோடு; இரியல் போய் உற- கெட்டு ஓடும்படியாக; வஞ்சி சென்று இறுத்தவன் - வஞ்சி மாலை புனைந்து மண்ணாசை காரணமாகப்படை எடுத்துத் (தன் எல்லையில்) தங்கிய பகை அரசன்; வாகை மீக் கொள - வெற்றிமேற்கொண்டு ஆரவாரம் செய்ய; அஞ்சின மன்னவன் - அப்பகைவனோடு தன் உயிர் உள்ளதுணையும் தன் மக்களைக் காப்பாற்றப் போர் செய்யாமல் பயந்த அரசன்; ஆக - (செல்லுகின்ற தீய கதியில்) செல்வேனாக. வஞ்சி - மண்ணாசை காரணமாகப் படை எடுத்துச் சென்று பகைவர் நாட்டு எல்லையில் தங்கிச் செய்யும் போர்ப் பகுதி. வஞ்சி என்பது மேற்சேறல் எனப்பெறும்.அதற்கு வஞ்சிப்பூச் சூடுதல் உரித்து. வாகை - வெற்றி; வெற்றி |