பெற்றோர் வாகைப்பூச் சூடுவர் - ‘வாகைப்பூவை மேல்சூடிக்கொள்ள’ எனலும் ஆம். யானும், ‘உம்’ எச்சவும்மை. சிறப்பும்மை ஆகலும் ஆம். 109 2211. | ‘கன்னியை அழி செயக் கருதினோன், குரு பன்னியை நோக்கினோன், பருகினோன் நறை, பொன் இகழ் களவினில் பொருந்தினோன் எனும் இன்னவர் உறு கதி என்னது ஆகவே. |
‘கன்னியை - திருமணம் ஆகாத கன்னிப்பெண்ணை; அழிசெயக் கருதினோன் - கற்பழித்துக் கெடுத்தல்செய்ய நினைத்தவன்; குருபன்னியை நோக்கினோன் - ஆசான் மனைவியைத் தீய கருத்துடன் பார்த்தவன்; நறை பருகினோன் - கள் உண்டவன்; இகழ் களவினில் - (எல்லாராலும்) இகழப்படுகின்ற களவினால்; பொன் பொருத்தினோன் - பொன்னைச்சேர்த்தவன்; எனும் இன்னவர் - என்கின்ற (நால்வராய) இவர்கள்; உறு -அடைகின்ற; கதி - (நரக) கதி; என்னது ஆக - எனக்குரியது ஆகுக.’ ‘கன்னி’ என்பதற்குப் பூப்பு எய்தாத பெண் எனலும் ஆம். பெண்களைப் பூப்பு எய்தும் முன்னரேதிருமணம் செய்வித்தல் அக்கால வழக்கம். ‘ஏ’ ஈற்றசை. 110 2212. | ‘ஊண் அல உண் வழி நாயின் உண்டவன், “ஆண் அலன், பெண் அலன், ஆர்கொலாம்?” என நாணலன், நரகம் உண்டு என்னும் நல் உரை பேணலன், பிறர் பழி பிதற்றி, ஆக யான், |
‘யான்-; உண்வழி ஊண் அல நாயின் உண்டவன் - உண்ணுகின்ற பொழுது உண்ணுதற்குஉரியது அல்லாதனவற்றை நாய்போல உண்டவன்; ஆண் அலன் - ஆண்மைத் தன்மை உடையனல்லன்;பெண் அலன் - (பிறப்பினால் ஆண் உருவத்தில் உள்ளபடியால்) பெண்ணும் அல்லன்; என- என்று (உலகம் கேவலமாகப்) பேசும்படி; நாண் அலன் - அதற்குச் சிறிதும் வெட்கப்படாதவனா யுள்ளவன்; நரகம் உண்டு என்னும் நல் உரை பேணலன் - ‘(தீயனசெய்தால்) நல்ல அறிவுரைகளைச் சிறிதும் மதியாதவன்; பிறர்பழி பிதற்றி -(எப்பொழுதும்) பிறரது பழிகளையே (பலரும் அறியப்) பிதற்றிக் கொண்டு திரிபவன்; ஆக - (இந் நால்வரும் செல்லும் நரக கதியில் சேர்வேன்) ஆக.’ ‘நாய் போல’ என்பது, உண்ணத் தகாதன உண்ணுதல், தானே பிறரை அடித்து விரட்டி உண்ணுதல்ஆகியவற்றுக்கு உவமையாகக் கொள்க. பிறர் நகைப்புக்கிடமாக வீரம், அஞ்சாமை, ஆண்மைசிறிதும் அற்றவன் ‘நாணலன்’ |