எனப்பெற்றான். ‘அலன்’ என ‘ன’ கர ஈற்றுச் சொல்லின் முடிதலின் ஆணாயிருந்து ஆண்தன்மைஅற்றவன் எனப் பொருள்கொள்க. 111 2213. | ‘மறு இல் தொல் குலங்களை மாசு இட்டு ஏற்றினோன், சிறு விலை எளியவர் உணவு சிந்தினோன், நறியன அயலவர் நாவில் நீர் வர உறு பதம் நுங்கிய ஒருவன், ஆக யான்.* |
‘யான் -; மறு இல் தொல் குலங்களை - குற்றம் சிறிதும் அற்ற பழமையான குலங்களை; மாசு இட்டு ஏற்றினோன் - குற்றம் உள்ளவை என்று குற்றம் கற்பித்து (அதனை உலகம் நம்புமாறுசெய்து குலக்) கேடு சூழ்ந்தவன்; சிறுவிலை - பஞ்ச காலத்தில்; எளியவர் -ஏழை எளிய மக்களது; உணவு - அற்ப உணவை; சிந்தினோன் - சிதறப் பண்ணியவன்; அயலவர் நாவில் நீர்வர - பார்த்துக் கொண்டிருக்கின்ற பக்கல் உள்ளவர் நாக்கில்நீர்ஊறும்படி; (அவர்களுக்குக் கொடாமல்) நறியன உறுபதம் - நறுமணம் உள்ள நல்லசிறந்த உணவை; நுங்கிய - தானே விழுங்கிய; ஒருவன் -; ஆக - (இம் மூவரும்செல்லும் தீய கதியில்) செல்வேனாக.’ விலை மிகுந்து பொருள் குறைவது பஞ்சகாலத்தில். அதனால், சிறு விலைக் காலம் என்று பஞ்சகாலத்தைச் சொல்வர். உணவைச் சிந்துவதே பாவம்; அதனினும் எளியவர்உணவைச் சிதறுதல் பெரும்பாவம் ஆகும். 112 2214. | ‘வில்லினும் வாளினும் விரிந்த ஆண் தொழில் புல்லிடை உகுத்தனென், பொய்ம்மை யாக்கையைச் சில் பகல் ஓம்புவான் செறுநல் சீறிய இல்லிடை இடு பதம் ஏற்க, என் கையால். |
‘(யான்) வில்லினும் வாளினும் விரிந்த ஆண்தொழில் - வில்லாலும் வாளாலும்செய்யத் தகும் விரிவான தீரச்செயலை; புல்லிடை உகுத்தனன் - பயனற்ற வழியில்போக்கியவனாய்; பொய்ம்மை யாக்கையை - பொய்த்தன்மை உடைய உடம்பை; சில்பகல் ஓம்பு வான் - சிலநாள் பாதுகாக்க (உயிர்வாழ வேண்டி); சீறிய செறுநர் இல்லிடை- தன்னைக் கேர்பித்துப் பகைத்தவர்கள் வீட்டில்; இடுபதம் - அவர்கள் இடுகின்ற உணவை; என் கையால் ஏற்க - என் மையால் ஏற்று உண்பவனாக (நான் ஆவேனாக.)’ இதுவரை தீயவர்கள் செல்லும் கதி என்று சொன்ன பரதன், தன்னையே அக்கேவலமானதீயவர்கள் நிலைக்கு ஆளாக்கிச் சூளுரை இப்பாட்டில் சொல்லியுள்ளான். உயிர்வாழ ஆசைப்பட்டுப்பகைவர் போடும் பிச்சைச் சோற்றைத் தின்று வாழ்தல் மிகக் கேவலமாம். பெருவீரம் உடையவனாய் இருந்தும் அவ்வாறு இருத்தல் அதனினும் மிகக் கேவலம். 113 |