பக்கம் எண் :

624அயோத்தியா காண்டம்

திரண்டாற் போன்ற (திடுக்கிடும்) மனம் உடையன; கால் திரண்டனைய
கால
- காற்று ஒன்றுகூடினாற்போன்ற (வேகமாகச் செல்லும்) காலினை
உடையன; கடுநடை - விரைந்து செல்லும்நடையை உடைய; கலினம் -
சேணம் அணிந்த; பாய்மா - பாயும் குதிரைகள்; நால் இரண்டு ஆய
கோடி
- எட்டுக்கோடியானவை; சேல் திரண்டனைய ஆய கதியொடும் -
சேல்மீன்கள் கூடிச் சென்றாற்போன்ற செலவோடும்; நவை இல் நாவாய்கள்
மீது
-குற்றமற்ற படகுகளின் மேலாக; நிமிரச் சென்ற- நிமிர்ந்து சென்றன.

     “ஆயிரம் அம்பிக்கு நாயகன்” (1953.) என வருதலின் நால் இரண்டாய
கோடி பாய்மாக்கள் என உரைக்க. புதிய இடம் கண்டால் மருளுதல்
குதிரைகளுக்கு இயல்பு ஆதலின், ‘பயம் திரண்டனையநெஞ்ச’ என்றார்.
ஓடுகின்ற பெருவெள்ள நீரில் யானைகள்போல நிலைத்து நீந்தல்
குதிரைகளால்இயலாது என்பது கருதி நாவாய்கள் மீதாச் சென்றனஎன்றார்.                                                     53

மகளிர் ஓடத்தில் செல்லுதல்  

2356. ஊடு உற நெருக்கி, ஓடத்து,
     ஒருவர்முன் ஒருவர் கிட்டி,
சூடகத் தளிர்க் கைம் மாதர்
     குழமினர் துவன்றித் தோன்ற,
பாடு இயல் களி நல் யானைப் பந்தி அம்
     கடையின் குத்தக்
கோடுகள் மிடைந்த என்ன,
     மிடைந்தன குரவுக் கொங்கை.

     சூடகம் - வளையல் (அணிந்த); தளிர்க் கைம் மாதர் - தளிர்
போன்ற(மென்மையான) கையினை உடைய மகளிர்; ஊடு உற நெருக்கி -
இடையே புகுந்து நெருங்கிநெருக்கி; ஒடத்து - நாவாய்களில்;  ஒருவர்
முன் ஒருவர் கிட்டி
- ஒருவர்க்குமுன்னால் ஒருவர் அண்மி; குழுமினர்
துவன்றித் தோன்ற
- திரண்டு நெருங்கித்தோன்றுதலால்; பாடு இயல் -
பெருமை பொருந்திய; களி நல் யானை -மதமகிழ்வுடைய உத்தம யானை;
பந்தி - வரிசையில்; அம் கடையின் குத்த -அழகிய முனைகளால்
குத்துமாறு; கோடுகள் மிடைந்த அன்ன - கொம்புகள் நெருங்கின என்று
சொல்லும்படி; குவவுக் கொங்கை - (அம்மகளிரின்) திரண்ட  முலைகள்;
மிடைந்தன- நெருங்கின.

     யானை வரிசைகளில் எதிர் எதிர் யானைத் தந்தங்களின் முனைகள்
ஒன்றோடு ஒன்று குத்திநெருங்குதல், கூட்டமான பெண்கள் வரிசை
வரிகையாக நெருக்க அவர்தம் முலைகள் நெருங்கிநெருக்குதல் இங்கே
ஒன்றுக்கொன்று உவமையாம்.                                    54