பக்கம் எண் :

கங்கை காண் படலம் 625

2357. பொலங் குழை மகளிர், நாவாய்ப்
     போக்கின் ஒன்று ஒன்று தாக்க,
மலங்கினர்; இரண்டு பாலும்
     மறுகினர் வெருவி நோக்க,
அலங்கு நீர் வெள்ளம் தள்ளி
     அழிதர, அங்கம் இங்கும்
கலங்கலின், வெருவிப் பாயும்
     கயற்குலம் நிகர்த்த, கண்கள்.

    நாவாய்- (மகளிர் ஏறிச் செல்லும்) மரக்கலங்கள்; போக்கின் -
செல்லும் வேகத்தில்; ஒன்று ஒன்று தாக்க
- ஒன்று மற்றொன்றோடு மோத;
பொலங்குழை மகளிர் - (அக்கலத்தில்உள்ள) பொன்னாலியன்ற குழை
அணிந்த மகளிர்; மலங்கினர் - மனம் கலங்கி; மறுகினர் - மயங்கி;
வெருவி - அச்சமுற்று;  இரண்டு பாலும் நோக்க - இரண்டுபக்கமும்
பார்க்க;  கண்கள் - (இவ்வாறு மிரண்டு பார்க்கு அவர்களின்) கண்கள்;
அலங்கும் நீர் வெள்ளம் தள்ளி அழிதர - அசைகின்ற நீர்ப்பெருக்குத்
தள்ளி நிலைகெட; அங்கும் இங்கும் கலங்கலின் - ஆற்று நீர் அங்கும்
இங்குமாகக் கலங்குவதனால்; வெருவிப் பாயும் - பயந்து துள்ளுகின்ற;
கயற்குலம் நிகர்த்த - மீன் கூட்டத்தைஒத்துள்ளன.

     கலத்தின் மோதலால் பயந்து  மிரளும் மகளிர் கண்களுக்கு,  கலம்
செல்லும் வேகத்தால்தள்ளப்படும் நீரில் பயந்து துள்ளும் கயல்மீன்கள்
உவமையாயின.  திடுக்கெனத் தோன்றும்அச்சத்தை வெரூஉதல் என்னும்
மெய்பபாடு என்பர்.                                            55

2358. இயல்வு உறு செலவின் நாவாய்,
     இரு கையும் எயினர் தூண்ட,
துயல்வன துடிப்பு வீசும்
     துவலைகள், மகளிர் மென் தூசு
உயல்வு உறு பரவை அல்குல் ஒளிப்பு
     அறத் தளிப்ப, உள்ளத்து
அயர்வுறும் மதுகை மைந்தர்க்கு
     அயாவுயிர்ப்பு அளித்தது அம்மா!

    இயல்பு உறு செல்வின் நாவாய்- இயல்பாகப் பொருந்திய
செலவினை உடைய மரக்கலங்கள்; இரு கையும் எயினர் தூண்ட
-
இருபக்கத்தும் வேடர்கள் உந்துதலால்; துயல்வன துடுப்பு
-
அசைவனவாகிய துடுப்புகள்; வீசும் துவலைகள் - வீசுகின்ற நீர்த்துளிகள்;
மகளிர் - (கலத்தில் உள்ள) மகளிரது; மென்தூசு - மெல்லிய ஆடை;
உயல்வு உறு - மறைந்து பொருந்திய; பரவை அல்குல் - பரந்த