‘அறுபதினாயிரம் அக்குரோணி’ என்று இறுதிசெய் சேனையும் - அறுபதாயிரம் அகௌஹிணிகள் என்று (கணக்கு) முடிவு செய்யப்பட்ட சேனைகளும்; எல்லைதீர் நகர் - அளவுகடந்த அயோத்தி நகரத்து; மறு அறு மாந்தரும் - குற்றம் அற்ற மக்களும்; மகளிர் வெள்ளமும் - பெண்கள் கூட்டமும்; செறி திரைக் கங்கை - நெருங்கிய அலைவீசுகின்ற கங்கை; பின் கிடக்கச் சென்ற - கங்கையாறு பின்னிடும்படி போயின. “அக்குரோணிகள் மூன்று பத்து ஆயிரத்தி இரட்டி” என்று முன்பும் (2307) கூறினார் ஆதலின்,இங்கே ‘இறுதிசெய் சேனை’ என்று கணக்கு வரையரை செய்யப்பட்ட சேனை எனக் கூறினார். அக்குரோணிஎன்னும் கணக்கு அப்பாடற் பகுதியுரையால் (2307) அறிக. பெரு நகரங்கள் மேலும் மேலும் விரிந்துவளர்ச்சி பெறுவன ஆதலின், ‘எல்லை தீர் நகர்’ என்றாராம். மகளிர் வெள்ளம் கூறுதலின்மாந்தர் ஆடவரேயாம். ‘ஏ’ ஈற்றசை. 62 பரதன் நாவாயில் ஏறுதல் 2365. | சுழித்து நீர் வரு துறை ஆற்றை, சூழ் படை கழித்து நீங்கியது என, கள்ள ஆசையை அழித்து, வேறு அவனி பண்டு ஆண்ட வேந்தரை இழித்து, மேல் ஏறினான்தானும் ஏறினான். |
சூழ்படை - (பரதன்) தன்னைச் சுற்றியுள்ள சேனை; நீர் கழித்து வருதுறையாற்றை - நீர் கழியுண்டாக்கிப் பெருகும் கரையமைந்த கங்கையாற்றை; கழித்து நீங்கியது என - கடந்து சென்றதாக; கள்ள ஆசையை அழித்து - வஞ்சகமானமண்ணாசையைப் போக்கி; அவனி பண்டு ஆண்ட வேறு வேந்தரை இழித்து - (இம்) மண்ணுலகைமுன்பு ஆட்சி புரிந்த மற்ற அரசர்களையெல்லாம் கீழ்ப்படுத்தி; மேல் ஏறினான்தானும் -மேற்சென்றவனான பரதனும்; ஏறினான் - (நாவாயின் கண்) ஏறினான். துறையின்கண் கழிக்கும் கங்கையாறு என்றார். ஆழமும் நீர்வரவும் கழலை அதிகப்படுத்தும்.மண்ணாசையை வெற்றி கொண்ட பரதன் மற்ற அரசர்களுக்கு மேம்பட்டான் ஆயினன். குணத்தால், பற்றற்ற தன்மையால் மேல் ஏறினான் இப்போது படகில் ஏறினான் என்று இருமுறை கூறியது ஒரு நயம். 63 பரதன் குகனுக்குக் கோசலையை அறிமுகம் செய்தல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 2366. | சுற்றத்தார், தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கி, |
|