பக்கம் எண் :

646அயோத்தியா காண்டம்

2389.மான்று, அளிக் குலம் மா மதம் வந்து உண, -
தேன் தளிர்த்த கவளமும், செங் கதிர்
கான்ற நெல் தழைக் கற்றையும், கற்பகம்
ஈன்று அளிக்க, நுகர்ந்தன - யானையே.

     யானை - (அச்சேனையில் உள்ள) யானைகள்; அளிக்குலம்- வண்டுக்
கூட்டங்கள்;  மா மதம் - (தம்முடைய) பெரிய மதநீர்ப் பெருக்கை; வந்து
மான்றுஉண
- வந்து  உண்டு மயங்க; (தாம்) கற்பகம் - கற்பக மரங்கள்;
தேன்தளிர்த்த கவளமும் - தேன் மிகுதியாகக் கலக்கப்பெற்ற
உணவுருண்டையையும்; செங்கதிர்கான்ற நெல்தழைக் கற்றையும் -
சிவந்த கதிர்களை யீன்ற நெற்பயிரின்கதிர்க்கட்டுகளையும்; ஈன்று
அளிக்க
- பெற்று  உண்ணத் தர;  நுகர்ந்தன -அவற்றை உண்டு
இன்புற்றன.

     யானைகள் உண்டபடி கூறினார்.  மதநீரை வண்டுகள் உண்ண.  தாம்
கற்பகம் தந்த கவளமும்தழையும் உண்டன என்றார். நெய்மிதி கவளம் தரல்
யானைக்கு வழக்கம். இங்குத் தேன் மிதிகவளம் என்றது  தேவருலகத்துச்
சிறப்பாம். ‘ஏ’ ஈற்றசை.                                         15

2590. நரகதர்க்கு அறம் நல்கும் நலத்த நீர்;
கர கதக் கரி கால் நிமிர்த்து உண்டன;
மரகதத்தின் கொழுந்து என வார்த்த புல்
குரகதத்தின் குழாங்களும் கொண்டவே.

     கர கதக் கரி - துதிக்கையை உடைய கோபமுற்ற யானைகள்;
நரகதர்க்கு -நரகத்தை அடைய வல்ல பாவிகளுக்கும்; அறம் நல்கும் -
புண்ணியப் பயனைத் தந்து  (அந்நரகத்திலிருந்து) அவரை மீட்க வல்ல;
உண்டன - கால்களை நிமிர வைத்துப் பருகின; குரகத்தின் குழாங்கள் -
குதிரைக் கூட்டங்கள்; மரகதத்தின் கொழுந்து என வார்ந்தபுல்- மரகத
மணியின் ஒளிக்கொழுந்துபோல் பசிய நீண்ட புல்லை; கொண்ட -
உட்கொண்டன.

     யானைகள் நீர் உண்டதும், குதிரைகள் புல் உண்டதும் கூறியபடி.
நரகு அதர்க்கு ‘எனப்பிரித்து, நரக வழிக்கு அறம் நல்கும் எனப் பொருள்
உரைத்தலும் ஒன்று. நீர் தேவகங்கைநீர். தீர்த்த விசேடம் ஆதலின்
பாவத்தை மாற்றும் தன்மை படைத்தது என்றாராம். ‘ஏ’ஈற்றசை.        16

பரதன் காய் கிழங்கு உண்டு, புழுதியில் தங்குதல்  

2391.இன்னர், இன்னணம் யாவரும், இந்திரன்
துன்னு போகங்கள் துய்த்தனர்; தோன்றல்தான்,