பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 647

 அன்ன காயும், கிழங்கும், உண்டு, அப் பகல்
பொன்னின் மேனி பொடி உறப் போக்கினான்.

     யாவரும் - எல்லோரும்; இன்னர் - இத்தன்மையராய்; இன்னணம் -
இவ்வாறு;  இந்திரன் துன்னு போகங்கள் - இந்திரன் அனுபவிக்கின்ற
இன்பங்களை;  துய்த்தனர் - அனுபவித்தார்கள்; தோன்றல் - பரதன்;
அன்ன காயும் கிழங்கும்உண்டு - அத்தகைய காயும், கிழங்கும்
ஆகியவற்றை உண்டு; பொன்னின் மேனி -பொன்மயமான தன்னுடம்பு;
பொடி உற - புழுதி படும்படி; அப் பகல் -அந்நாளை; போக்கினான் -
கடத்தினான்.

     அனைவரும் இனிது உறங்கப் பரதன் விரதவொழுக்கத்தோடு நாளைக்
கடத்தினன் என்றவாறாம்.‘அன்ன காயும்’ என்பதில் ‘அன்ன’ உரையசையாக
வந்ததாகக் கொள்க. இனி ‘கற்பகமரத்திலிருந்து கிடைத்த’ என்பாரும் உளர்.
ஆயின் அது உலக இன்பத்துக்கு முரணானதாக ஆகிப்பரதனது
விரதவொழுக்கத்துக்குப் பங்கமாதலின் அவ்வாறுரைத்தல் ஏலாதாம். ‘தான்’
என்பதும்உரையசை.                                            17

கதிரவன் தோன்றுதல்  

2392.நீல வல் இருள் நீங்களும், நீங்குறும்
மூலம் இல் கனவின் திரு முற்றுற,
ஏலும் நல் வினை துய்ப்பவர்க்கு ஈறு செல்
காலம் என்னக் கதிரவன் தோன்றினான்.

     நீலம் - நீல நிறம் உள்ள;  வல் இருள் - திணிந்த இருளானது;
நீங்களும் - நீங்கிய அளவில்; நீங்குறும் - தாறும் இல்லாமல் போகி
விடுகிற; மூலம் இல் - அடித்தளம் அற்ற; கனவின் - கனவு போல;
திருமுற்றுற -சேனைகள் அனுபவித்த செல்வ போகம்  முடிவடையும் படி;
ஏலும் நல்வினை துய்ப்பவர்க்கு -பொருந்திய புண்ணியப் பயனை
அனுபவிப்பவர்க்கு;  ஈறுசெல் காலம் என்ன - அது  முடிவடையும்
காலம்போல;  கதிரவன் - சூரியன்;  தோன்றினான் -.

     கங்குற் பொழுது நீங்கியது; கதிரவன் தோன்றினான்; முன்பு பரதனுடன்
வந்தோர்அனுபவித்த போகமும் முடிவுக்கு வந்தது.  இதனைக் கனாப்போல
என்றார். புண்ணியம் முடிந்த பின்னர்மீண்டும் சுவர்க்கத்திலிருந்து
மண்ணுலகிற்கு வருவார்போல அவர்கள் நிலை ஆகிறது ஆகலின் “ஈறு
செல் காலம் என்ன” என்று கதிரவன் தோற்றத்தைவருணித்தார்.        18

பரதன் படைகள் தம் நிலை அடைதல்  

2393.ஆறி நின்று அறம் ஆற்றலர் வாழ்வு என
பாறி வீந்தது செல்வம்; பரிந்திலர்,