பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 649

     (சேனைகள் சேறலான்) துகள் - புழுதிப்படலம்;  எழுந்தது - மேல்
கிளம்பியது;  எரியும் வெய்யவன் - தகிக்கும் சூரியன்; அதின்
அழுந்தினன்
-அப்புழுதியில் அழுந்திப் போனான்; அவிப்ப அரும்
வெம்மை ஆறினான்
- பிறிதொன்றால்அணைத்தற்கு முடியாத தனது
வெம்மை நீங்கப் பெற்றான்;  கரி பொழிந்தன மதம் -யானைகள்
பொழிந்தனவாகிய மதநீர்; பொடிவெங்கானகம் வழிநடந்து ஏற ஒணாமை-
புழுதியுடைய கொடிய காட்டுவழியில் நடந்து மேற்சேற முடியாதபடி
(வழுக்கும் சேறு செய்து); இழிந்தன - (எங்கும்) பெருகின.

பாலை நிலத்தின் கொடுமையும் யானைகளின் மிகுதியும் கூறியவாறு. ‘ஏ’
ஈற்றசை.                                                     21

2396. வடியுடை அயிற் படை மன்னர் வெண்குடை,
செடியுடை நெடு நிழல் செய்ய, தீப் பொதி
படியுடைப் பரல் உடைப் பாலை, மேல உயர்
கொடியுடைப் பந்தரின், குளிர்ந்தது எங்குமே.

     தீப்பொறி படியுடை - நெருப்பு உள் தங்கிய இடத்தை உடைய;
பரல் உடைப்பாலை - பருக்கைக் கற்களை உடைய பாலைநிலம்;  வடி
உடை
- கூர்மை பொருந்திய;  அயிற்படை - வேற்படைய உடைய;
மன்னர் - அரசர்களது;  வெண்குடை -வெண்குடையானது;  செடி உடை
நெடு நிழல் செய்ய
- அடர்ந்துள்ள நீண்ட நிழலைச்செய்தலான்;  மேல்
உயர் கொடி உடைப் பந்தரின்
- மேலே உயர்ந்துள்ள கொடிகள்
படர்ந்துள்ள பந்தல்போல; எங்கும் - எவ்விடமும்; குளிர்ந்தது - குளிர்ச்சி
உடையதாக ஆயிற்று.

     செடித்தன்மையாவது  அடத்தியாகவும் குட்டையாகவும் இருத்தல்;
அதனுள் குட்டையை விலக்கவேண்டி‘நெடுநிழல்’ என்றாராதலின், அடர்ந்து
நீண்ட நிழல் என்று பொருள் ஆயிற்று. மன்னர் குடையின்மிகுதியும்
உயர்ச்சியும் குறித்தது. பந்தர் நிழல் தருதலும் அதன் மேலும் கொடி
குளிர்ச்சிதருதலும் உண்டாதலின், மன்னர் தம் குடையின் நிழலுக்கும்
குளிர்ச்சிக்கும் ஏற்புடையஉவமையாயிற்று. கொடிப்பந்தர் என்னும் ஆம்.
‘ஏ’ ஈற்றசை.                                                 22

2397. ‘பெருகிய செல்வம் நீ பிடி’ என்றாள்வயின்
திருகிய சீற்றத்தால் செம்மையான், நிறம்
கருகிய அண்ணலைக் கண்டு, காதலின்
உருகிய தளிர்த்தன - உலகை ஈட்டமே.

     ‘பெருகிய செல்வம் நீ பிடி’ - மிக்க அரசச் செல்வத்தைப் பரதா! நீ
ஏற்றுக்கொள்; என்றாள்வயின் - என்று சொல்லிய கைகேயியிடத்தே;
திருகியசீற்றத்தால் - கழன்று எழுந்த கோபத்தால்;  செம்மையான் -
முகம் சிவந்த;  கருகிய அண்ணலைக் கண்டு -