பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 65

அவ் அரசே- அந்த அரசாட்சியே; அரசு - அரசாகும்; அன்னது -
அத்தகைய  அரசாட்சி;  வாளின் மேல் வரு மா தவம் - வாளின் கூரிய
முனைமேல் நின்றுகொண்டு  செய்யும் பெருந்தவம்எனலாகும்.’

     நாள்தோறும் வருவாய் பெருக்கி, ஐம்புலன்களை அடக்கி,  வலிமையும்
மன உறுதியும்  உடையவராய்அரசாளுவோர் தவம் செய்வர் ஆவர்.
அரசராவரும் ஒருவகையில் தவம் செய்வோரே ஆவர், நல்லரசர்ஆவர்.
நல்லரசர் ஆக ஆட்சிபுரியின் என்பது கருத்து.  ‘ஏ’ காரம் விளி.       22

1421. ‘உமைக்கு நாதற்கும், ஓங்கு புள் ஊர்திக்கும்,
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்,
சமைத்த தோல் வலி தாங்கினர் ஆயினும்,
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே,

     ‘உமைக்கு நாதற்கும் - உமாதேவியின் கணவனாகிய
சிவபெருமானுக்கும்; ஓங்கு புள்ஊர்திக்கும் - உயர்ந்த கருடனை
வாகனமாக உடைய திருமாலுக்கும்; இமைப்பு இல் நாட்டம்- இமையாத
கண்கள்;  எட்டு உடையானுக்கும் - எட்டு உடைய நான்முகனுக்கும்;
சமைத்த -பொருந்திய; தோள்வலி  - தோள் ஆற்றலை;  தாங்கினர் -
பெற்றுடையராக (அரசர்);  ஆயினும் - இருந்தாலும்;  அமைச்சர் சொல்
வழி -
மந்திரியரது ஆலோசனைவழியில்;  ஆற்றுதல் - அரசாட்சியைச்
செய்தல்;  ஆற்றல் - ஆண்மையாகும்.’

     மும்மூர்த்திகளைப் போலத் தோள்வலி பெற்ற அரசரும்அமைச்சர்
சொற்கேட்டு ஆட்சி நடத்தல் வேண்டும் என்பதாம். நான்முகன் ஆதலால்
எட்டுக் கண்கள்உடையான் ஆயினன். ‘ஓர்’ அசை. உ (அம்மா) மா.
(வேண்டாம்) அம்மா வேண்டாம் என்று சொல்லியபடியால்உமா என்று
பெயராயிற்று என்பர். உமா,  உமை என வந்தது, அமைச்சர் - அமாத்தியர்;
அருகிருந்து ஆவன சொல்வார். ‘உழையிருந்தான்’ எனப் பெயர் உரைப்பர்
திருவள்ளுவர், (குறள். 638.) ‘ஏ’காரம் ஈற்றசை.                     23

1422.‘என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம்
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும்,
அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ?

     ‘என்பு தோல் உடையார்க்கும் - எலும்பும் தோலும் உடையார் ஆகி
உள்ள முனிவர்களுக்கும்;இலார்க்கும் - அவை இல்லாது  தேவசரீரம்
பெற்ற தேவர்களுக்கும்;  தம் வன்பகைப் புலன் - தம்முடைய  வலிய 
பகையாகிய புலன்களை; மாறசு அற - குற்றம் இல்லாமல்;