பக்கம் எண் :

68அயோத்தியா காண்டம்

     துலையின் நடுமுள்ளை நாக்கு எனல் வழக்கு.  நடுவு நிலைமைக்குத்
துலாக்கோல்  உவமையாதல்“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல்
அமைந்து ஒருபாற், கோடாமை  சான்றோர்க் கணி” என்பதிற் (குறல். 118)
காண்க. பொன்னெடை என்பது மிகத் துல்லியமாக நிறுக்கப்படுவது; ஆதலின்
‘செம்பொன் துலை’  என்றார்.  நல்லவர் - இங்கு அமைச்சர்.  ‘காலமறிதல்’
என்னும் திருக்குறள்அதிகாரத்தின்கண் ‘காலம்’ அரசர்க்கு இன்றியமையாத
சிறப்புடையது எனல் காண்க.                                    27

1426.“ஒர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை
போர் இல் தொல் விதி பெற்று உளது” என்று அரோ,
தீர்வு இல் அன்பு செலுத்தலின், செவ்வியோர்
ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே.

     ‘ஓர்வின் - ஆய்வினை உடைய;  நல்வினை ஊற்றத்தினார் - நல்ல
தொழிலின்கண் எப்பொழுதும் முயலும் முயற்சியை உடைய முனிவர்களது;
உரை - மொழியை;  பேர்வுஇல் தொல்விதி- மாறு படுதல் இல்லாத
பழைய விதி; பெற்று உளது - அடைந்து (அவ்வுரைவழி)  நடக்கின்றது;
என்று - என்று கருதி;  தீர்வுஇல் அன்பு  செலுத்தலின் - அவர்களிடத்து
நீங்காதஅன்பைச் செலுத்துகின்ற காரணத்தால்;  செல்வியோர் ஆர்வம் -
நன்மையுடைய அப்பெரியோர்தம்பால் செலுத்தும் விருப்பம்; மன்னவற்கு -
அரசனுக்கு;  ஆயுதம் ஆவது - படைக்கலம்ஆகும்.’

     முன்னர் (1416) ‘அவர் ஏவ நிற்கும் விதி’  என்றதும் காண்க.
முனிவர்க்கு  ஊழும்  கட்டுப்பட்டு நடக்கும். அதனால் அவர்களது
பிரியத்தைக் சம்பாதித்துக்கொள்ளுதல்  மன்னவற்குப் பெரும்படையாகும்.
‘அன்பீனும் ஆர்வம் உடைமை அதுவீனும், நண்பு என்னும் நாடாச் சிறப்பு”
என்ற குறளைப்(குறள் - 74) பின்னிரண்டு  வரிகளுடன் ஒப்பிடுக. ‘அரோ’
‘ஏ’ ஈற்றசை.                                                  28

1427. ‘தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனின், கடுங் கேடு எனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே.’

     ‘புவிக்கு - இந்த உலகில் உள்ளவர்க்குத் (தீமை விளைக்கத்
தோன்றும்);  தூமகேது  என - வால் நட்சத்திரம் என்று சொல்லும்படி;
தோன்றிய - பிறந்துள்ள,வாம மேகலை மங்கையரால் - அழகிய
மேகலாபரணம் அணிந்த பெண்களால்; வரும் -உண்டாகின்ற; காமம்
இல்லை எனின் -
காம நோய்மட்டும் இல்லையானால்;  கடும்- கொடிய; 
கேடு எனும் நாமம் இல்லை - கெடுதி என்னும் சொல்லே இல்லையாகும்; 
நரகமும் இல்லையே - நரகத் துன்பமும் இல்லை.’