பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 715

     முகில் வண்ணன் - இராமன்;  இச்செல்வம் - அரசுச் செல்வம்.    76-11

203.‘கொங்கு அலர் நறு விரைக்
     கோதை மோலியாய்!
சங்க நீர் உலகத்துள்,
     தவத்தின் தன்மையால்,
அங்கணன் அரசு
     செய்தருளும் ஆயிடின்’-
சிங்களர் - ‘இங்கு இதில்
     சிறந்தது இல்’ என்றார்.

     கோதை - மாலை;  மோலி - மௌலி,  அதாவது  மகுடம்;
அங்கணன்-அருள் கண்ணையுடைய இராமன்.                  76-12

204.ஆதியின் மனுவும் நின்
     அரிய மைந்தற்குப்
பாதியும் ஆகிலன்;
     பரிந்து வாழ்த்தும் நல்
வேதியர் தவப் பயன்
     விளைந்ததாம்’ என,
சேதியர் சிந்தனை
     தெரியச் செப்பினார்.

     ஆதியின் மனு - வைவஸ்வத மனு, சூரிய குல முன்னோன்; பரிந்து- அன்புகொண்டு; சேதியர் - சேதி நாட்டவர்.                   76-13

205.‘அளம் படு குரை கடல்
     அகழி ஏழுடை
வளம் படு நெடு நில
     மன்னர் மன்னனே!
உளம் படிந்து உயிர் எலாம்
     உவப்பது ஓர் பொருள்
விளம்பினை பெரிது!’ என
     விராடர் கூறினார்.

     அளம் - வயல்,  உப்பளம் என்பது  போல.               76-14