2. மந்தரை சூழ்ச்சிப் படலம் 206. | பொன்னும், மா மணியும். புனை சாந்தமும், கன்னி மாரொடும் காசினி ஈட்டமும், இன்ன யாவையும் ஈந்தனள், அந்தணர்க்கு, அன்னமும் தளிர் ஆடையும் நல்கினான். |
அந்தணர்க்கு ஈந்தனள் என முடிக்க. நல்கினாள். கோசலை. 9-1 207. | நல்கி, நாயகன் நாள்மலர்ப் பாதத்தைப் புல்லிப் போற்றி, வணங்கி, புரை இலா மல்லல் மாளிகைக் கோயில் வலங்கொளா, தொல்லை நோன்புகள் யாவும் தொடங்கினாள். |
புரை - குற்றம். உயர்ச்சி என்பதும் ஆம்; தனக்கு மேல் உயர்ச்சி இல்லாத எனஉரைக்க. நோன்பு - விரதம். 9-2 208. | கடி கமழ் தாரினான், கணித மாக்களை முடிவ உற நோக்கி, ஓர் முகமன் கூறி, பின், ‘வடி மழுவாளவற் கடந்த மைந்தற்கு முடி புனை முதன்மை நாள் மொழிமின்’ என்றனன். |
கணித மாக்கள் - சோதிடர்; வடி மழுவாளவன் - பரசு ராமன். 9-3 |