3. கைகேயி சூழ்வினைப் படலம் 209. | வந்து மன் நகரில் தம்தம் வகைப்படும் உருவம் மாற்றி, சுந்தரத் தடந்தோள் மாந்தர் தொல் உருச் சுமந்து தோன்றாது, அந்தரத்து அமரர், சித்தர், அரம்பையர், ஆதி ஆக இந்திரை கொழுநற் போற்றி இரைத்துமே எய்தி நின்றார் |
மன் நகர் - அரச நகரம், அயோத்தி. அமரர், சித்தர், அரம்பையர் முதலியோர் வடிவம் மறைத்து மனித வடிவில் அயோத்தியில் வந்து நின்றார் என்பதாம்; இந்திரை - திருமகள். 75-1 4. நகர் நீங்கு படலம் 210. | விழுந்து பார்மிசை, வெய்து உயிர்த்து, ஆவி சோர்ந்து, எழுந்து, ‘என் நாயகனே! துயர் ஏது எனாத் தெளிந்திலேன்; இது செப்புதி நீ’ எனா, அழுந்தினாள்; பின்னர் அரற்றத் தொடங்கினாள். |
வெய்து உயிர்த்து - வெப்பமாக மூச்சு விட்டு, பெருமூச்சு விடுதலாம்; அழுந்தினாள்- துன்பத்தில் மூழ்கினாள். 29-1 211. | அன்னாள் இன்ன பன்னி அழியத் துயரால், மன்னர் மன்னானவனும் இடரின் மயங்கி, ‘மைந்தா! மைந்தா! முன்னே வனம் ஏகிடல் நீ முறையோ? முதல்வா! முறையோ? என்னே, யான் செய் குறைதான்?’ என்றே இரங்கி மொழிவான்; |
பன்னி - பலமுறை சொல்லி; மன்னர் மன் ஆனவனும் - தயரதனும். 53-1 |