212. | உணர்வு ஏதும் இலாள் உரையால் உரை சால் குமரன் நெடு நாள் புணரான் நிலம்; மா வனமே போவானேயாம்; என்னில், இணரே பொலி தார் நிருபா; இடரால் அயர்வாய்; இதுவும் துணையோ? - துணைவா!’ என்றாள்; ‘துயரேல் ! துயரேல்!’ என்றாள். |
குமரன் - இராமன்; இணர் - பூங்கொத்து. 53-2 213. | ‘ “சேல் ஆகிய மா முதல்வன் திரு உந்தியின் நீள் மலரின்- மேல் ஆகிய நான்முகனால், வேதங்களின் மா முறையின்- பால் ஆகிய யோனிகளின் பல ஆம் வருணம் தருவான், நால் ஆகியது ஆம் வருணம்தனின், முன் எமை நல்கினனால். |
சேல் ஆகிய மா முதல்வன் - மீனாக அவதாரம் செய்த திருமால்; முன் -முதல் வருணம், அந்தணர் பிறப்பில். 76-1 214. | ‘ “அந் நான்மறையோன் வழியில், அருள் காசிபன் நல் மைந்தன், மின் ஆர் புரி நூல் மார்பன், விருந்தேசனன் மெய்ப் புதல்வன், நல் நான்மறை நூல் தெரியும் நாவான் சலபோசன் எனச் சொன்னான் முனிவன் தரு சுரோசனன் யான்” என்றான். |
பிரமன் - காசிபன், விருத்தேசனன், சலபோசன், சுரோசனன் எனக் குல முறைக்காண்க. 76-2 215. | ‘தாவாத அருந்தவர் சொல் தவறாததானால், தமியேன் சாவாதவரும் உளரோ? தண்டா மகவு உண்டு’ என்றே |
|