| ஓவாதவர் முன் நின்றறேன்; ஒரு சொல் உடையாது அவரும், பூவார் அனலுள்பொன்றி, பொன் - நாடு அதனின் புக்கார்.’ |
தவறாது அதனால் - எனப் பிரிக்க; ஒரு சொல் உடையாது - ஒன்றும் பேசாது. 86-1 216. | இம் மா மொழி தந்து அரசன் இடர் உற்றிடுபோழ்தினில், அச் செம் மா மயில் கோசலையும், திகையா, உணர்வு ஓவினளால்; மெய்ம்மாண் நெறியும், விதியின் விளைவும், தளர்வின்றி உணரும் அம்மா தவனும் விரைவோடு அவலம் தரு நெஞ்சினனாய். |
ஓவினள் - ஒழிந்தாள்; மாதவன் - வசிட்டன் 87-1 217. | என்று என்று சீற்றத்து இளையோன் இது இயம்பிடாமுன், கன்று ஒன்றும் ஆவின் பல யோனியும் காத்த நேமி வன் திண் சிலைக் கைம் மனு என்னும் வயங்கு சீர்த்திக் குன்று ஒன்று தோளான் மருமான் இவை கூறலுற்றான்; |
மருமான் - பரம்பரையில் வந்தவன். இராமன். 127-1 218. | ஆய் தந்த மென் சீரை அணிந்து அடி தாழ்ந்து நின்ற சேய் உந்து நிலை நோக்கினள், சேய் அரிக் கண்கள் தேம்ப, வேண் தந்த மென் தோளி தன் மென் முலை பால் உகுப்ப - தாய், ‘நிந்தை இன்றிப் பல ஊழி தழைத்தி!’ என்றாள். |
ஆய் - தாய், கைகேயி; தாய் - சுமித்திரை. 147-1 |