பக்கம் எண் :

720அயோத்தியா காண்டம்

219.‘வானமே அனையது ஓர்
     கருணை மாண்பு அலால்
ஊனம் வேறு இலானுடன்,
     உலகம், யாவையும்,
கானமே புகும்எனின்,
     காதல் மைந்தனும்
தானுமே ஆளும்கொல் தரை?’
     என்றார் சிலர்.

     ஊனம் வேறு இலான் - இராமன்.  இராமனுடன் அனைவரும் காடு
சென்றால் கைகேயியும்,பரதனுமே ஆள்வார்களோ இப்பூமியை என்பது
மக்கள் கூற்று,.                                            191-1

220. போயினான் நகர்
     நீங்கி - பொலிதரு
தூய பேர் ஒளி ஆகி,
     துலங்கு அருள்
ஆய மூவரும் ஆகி,
     உயிர்த் தொகைக்கு
ஆயும் ஆகி,
     அளித்தருள் ஆதியான்.

     பேரொளி ஆகி,  மும்மூர்த்திகள் ஆகிய பிரமன்,  திருமால்,  சிவன்
ஆகி; உயிர்த்தொகைக்கு ஆயும் ஆகி
-  உயிர்களுக்குத் தாயும் ஆகி
உள்ள இராமன்.                                           234-1

5. தைலம் ஆட்டு படலம்

221.தொடுத்த கலிடைச் சிலர்
     துவண்டனர், துயின்றார்;
அடுத்த அடையில் சிலர்
     அழிந்தனர் அயர்ந்தார்;
உடுத்த துகில் சுற்று
     ஒரு தலைச் சிலர் உறைத்தார்;
படுத்த தளிரில் சிலர்
     பசைந்தனர் அசைந்தார்.

     கல் இடை - கல்லிடத்து;  அடை - இலை;  பசைந்தனர் - அன்பு
கொண்டவராய்.                                              16-1