222. | ஒரு திறத்து உயிர் எலாம் புரந்து, மற்று அவண் இரு திறத்து உள வினை இயற்றும் எம்பிரான் தரு திறத்து ஏவலைத் தாங்கி, தாழ்வு இலாப் பொரு திறல் சுமந்திரன் போய பின்னரே. |
இரு திறத்து உள வினை - நல்வினை, தீவினை. 46-1 223. | துந்துமி முழங்க, தேவர் தூய் மலர் பொழிந்த வாழ்த்த, சந்திர வதனத்து ஏயும் அரம்பையர் தழுவ, தங்கள் முந்து தொல் குலத்துளோரும் முக்கணான் கணமும் சூழ, அந்தரத்து அரசன் சென்றான், ஆன தேர்ப் பாகன் சொல்லால். |
அரசன் - தயரதன். 59-1 6. கங்கைப் படலம் 224. | அன்ன காரணத்து ஐயனும், ஆங்கு அவர் உன்னு பூசனை யாவும் உவந்தபின், மின்னு செஞ் சடை மெய்த் தவர் வேண்டிட, பன்ன சாலையின் பாடு இருந்தான் அரோ. |
பன்ன சாலை - தவத்தோர் தங்கும் குடில்; பர்ண சாலை - பன்ன சாலை ஆயிற்று; இலை, தழைகளால் வேயப்பெற்றது. ‘அரோ’ அசை. 27-1 7. குகப் படலம் 225. | நின்றான் நெஞ்சில் நிரம்புறும் அன்பால், |
|