| ‘இன்றே நின் பணி செய்திட, இறைவா! நன்றே வந்தனென்; நாய் அடியேன் யான்’ எயினரின் இறையோன். |
எயினர்- வேடர்; இறைவா- இராமனே;கூவினன்- அழைத்தான். 10-1 226. | வெயில் விரி கனகக் குன்றத்து எழில் கெட விலகு சோதிக் கயில் விரி வயிரப் பைம் பூண் கடுந் திறல் மடங்கல் அன்னான் துணில் எனும் அணங்கு வந்து தோன்றலும், அவளை, ‘நாமே எயிலுடை அயோத்தி மூதூர் எய்து நாள் எய்துக!’ என்றான். |
கனகக் குன்றத்து....சோதி என்றது இலக்குவன் திருமேனியை; கயில்- மூட்டு; மடங்கல் - சிங்கம். சிங்கம் அன்னான் இலக்குவன். தூக்கம் என்னும் மகள்அங்கே வந்தாள். அவளை நாம் அயோத்திக்கு வருகின்ற நாளில் எம்பால் வருக என்றான்இலக்குவன்; பதினான்கு ஆண்டுகளும் உறங்காமல் இருந்தான் ஆதலின் ‘உறங்காவில்லி’ என்பது அவனுக்கு ஒரு பெயர். 22-1 227. | மறக் கண் வாள் இளைய வீரன் ஆணையை மறுத்தல் செல்லா உறக்க மா மாதும், அண்ணல் உபய பங்கயங்கள் போற்றி, ‘துறக்கமாம், என்னல் ஆய தூய மதில் அயோத்தி எய்தி இறுக்கும்நாள், எந்தை பாதம் எய்துவல்’ என்னப் போனாள். |
உபய பங்கயம் - இரண்டாகிய தாமரை - இங்கே திருவடிக்கு உருவகம். துயில் மடந்தைஇலக்குவனைத் தீண்டாது சென்றாளாம். 22-2 228. | மற்றவள் இறைஞ்சி ஏக, மா மலர்த் தவிசின் நீங்காப் |
|