| பொற்றொடி யோடும் ஐயன் துயில்தரும் புன்மை நோக்கி, இற்றது ஓர் நெஞ்சன் ஆகி, இரு கண் நீர் அருவி சோர, உற்ற ஓவியம்அது என்ன, ஒரு சிலை அதனின் நின்றான். |
ஒரு சிலை - ஒரு கல். இனி ஒரு வில் எனலும் ஆம் ‘வில்லை ஊன்றிய கையோடும்நின்றான்’ என வருதலின். 22-3 9. சித்திரகூடப் படலம் 229. | ‘நெய் கொள் நீர் உண்டு, நெருப்பு உண்டு, நீண்டு, மைந் நிறைந்த வை கொள் வேல் எனக் காலனும் மறுகுறும் கண்ணாய்! மெய்கள் நோகின்ற பிடிகளை விரும்பிய வேழம் கைகள் நோகில தாங்கின நிற்பன காணாய்!’ |
மெய் நோவுற்ற பெண்யானைகளை ஆண் யானைகள் தம் கை நோவு கருதாது தாங்கிக்கொண்டுநிற்பனவாம். 36-1 230. | ‘விடம் கொள் நோக்கி! நின் இடையின் மின் என வெருவி, படம் கொள் நாகங்கள் முழை புகப் பதைப்பன பாராய்! மடங்கள் ஆளிகன் எனக் கொடு மழைஇனம் முழங்க, கடம் கொள் கார் மதக் மைம்மலை இரிவன காணாய்! |
மின்னலைக் கண்டு பாம்பு அஞ்சும். இடிகேட்டு வெருளும் நாகம். இடி, மின்னல் இரண்டும்ஒன்றே. சிங்கம் போல மேகம் முழங்க யானைகள் ஓடுகின்றன. 36-2 221. | ‘எய்த இன்னல் வந்த போது யாவரேனம் யாவையும் |
|