பக்கம் எண் :

724அயோத்தியா காண்டம்

 செய்ய வல்லர் என்று கொள்க;
     சேண் நெறிக்கண் நீங்கிட,
மைய கண்ணி செய்ய பாதம்
     வல்ல ஆய; எம்பிதன்
கைகள் இன்று பன்னசாலை
     கட்ட வல்ல ஆயவே.’

     ‘துன்பம் வந்த போது யாரும் எவையும் செய்ய வல்லவர்’ என்ற உலக
நீதி இங்குக்கூறப்படுகிறது.                                    50-1

232.‘தினைத் துணை வயிறு
     அலாச் சிற்றெறும்புகள்
வனத்திடைக் கரிகளை
     வருத்தி வாழ்வன;
அனைத்து உள உயிர்களும்
     யாவும் அங்ஙனே;
மனத்து இடர் நீங்கினார்
     இல்லை. மன்னனே!’

     எறும்பும் யானையை வருத்துகிறது. எல்லா உயிர்களும் ஒன்றையொன்று
வருத்துகின்றன. துன்பம்அற்றவர் யாரும் இல்லை என்றபடி.         55-1

10. பள்ளிபடைப் படலம்

233.ஆய காதல்
     தனையனைத் தந்த அத்
தூய தையல்
     தொழிலுறுவார், ‘உனைக்
கூயள் அன்னை’ என்றே
     சென்று கூறலும்,
ஏய அன்பினன்தானும்,
     சென்று எய்தினான்.

     தொழில் உறுவார் - ஏவல் மகளிர்;  அன்பினன் - இராமன்.   41-1

234.‘தீ அன கொடியவள்
     செய்த செய்கையை
நாயினேன் உணரின், நல்
     நெறியின் நீங்கலாத்