பக்கம் எண் :

மிகைப்பாடல்கள் 725

 தூயவர்க்கு இடர் இழைத்து
     உழலும் தோமுடை
ஆயவர் வீழ் கதி
     அதனின் வீழ்க, யான்’

     தோம் - குற்றம். நல்லவர்க்குத் தீங்கு செய்யும் கயவர்கள் செல்லும்
நரககதியில் நான் செல்வேனாக.                                116-1

235.உந்து பொன்
     தடந் தேர் வலானொடும்,
மந்திரப் பெருந்
     தலைவர், மற்றுளோர்,
தந்திரத் தனித்
     தலைவர், நண்பினோர்,
வந்து சுற்றும் உற்று,
     அழுது மாழ்கினார்.

     தேர் வலான் - சுமந்திரன்;  மாழ்கினார் - மயங்கினார்,      125-1

236.என்று கொண்டு மா
     தவன் இயம்பலும்,-
நின்று நின்று தான்
     நெடிது உயிர்த்தனன்;
‘நன்று, நன்று!’ எனா
     நகை முகிழ்த்தனன்;-
குன்று குன்றுறக்
     குலவு தோளினான்.

     மா தவன் - வசிட்டன்;  முகிழ்த்தல் - மொக்குவிட்டு மலர்தல்,
அங்குச் சிரித்தான் என்பது பொருள்;  தோளினான் - பரதன்.      131-1

237.அன்னதாக, அங்கு,
     ஆறு பத்து எனச்
சொன்ன ஆயிரம்
     தோகைமார்களும்,
துன்னி வந்தனர்-
     சோர்வு இலாது, அவர்
மின்னும் வாள்
     எரிமீது வீழவே.