பக்கம் எண் :

மந்தரை சூழ்ச்சிப் படலம் 73

 கள் அவிழ் கோதையான்
     செல்வம் காணிய,
புள்எலாம் திருநகர்
     புகுந்த போன்றவே.

     வெள்ளிய - வெண்மையானவை; கரியன - கருமையானவை; செய்ய-
செம்மையானவை; வேறு உள - வேறு பல நிறமானவை ஆக; கொள்ளை-
மிகுதியான; வான் - பெரிய;கொடி நிரைக் குழாங்கள் - கொடி வரிசைக்
கூட்டங்கள்; தோன்றுவ - நகரில் தோன்றுகின்றன(அவை); கள் அவிழ்
கோதையான்-
மதுவிரியும் மாலையணிந்த இராமனது; செல்வம்- முடிசூட்டு
விழாச் செல்வத்தை; காணிய - காண விரும்பி;  புள் எலாம் -பறவைகள்
எல்லாம்; திருநகர் - அயோத்தியில்; புகுந்த போன்ற - நுழைந்தவை
போன்றுள்ளன,

     பலவகை நிறமுடைய கொடிகள் கட்டப்பெற்றதைப் பறவைகள் நகரிற்
புகுந்தனபோல் என வருணித்தார்.‘தோன்றுவ’ படுத்தல் ஓசையாற்
பெயராயிற்று.  ‘ஏ’ காரம் ஈற்றசை                                37

1436.மங்கையர் குறங்கு என வகுத்த, வாழைகள்;-
அங்கு - அவர் கழுத்து எனக் கமுகம் ஆர்ந்தன;
தங்கு ஒளி முறுவலின் தாமம் நான்றன;
கொங்கையை நிகர்த்தன, கனக கும்பமே.

     அங்கு - அயோத்தியில்; மங்கையர் குறங்கு என- மாதரது தொடை
போல; வாழைகள் - வாழை மரங்கள்; வகுத்த - நிறுத்தப் பட்டன; அவர்
கழுத்து எனக்கமுகம் ஆர்ந்தன -
அம்மகளிர் கழுத்துப் போலக் கமுக
மரங்கள் நிறைந்தன; தங்கு ஒளி முறுவலின்- (அவரிடத்தே) வெள்ளொளி
நிறைந்த புன்சிரிப்புப் போல;  தாமம் நான்றன - முத்துமாலைகள்
தொங்கின; கனகக் கும்பம் - பொன்மயமான பூர்ண கும்பங்கள்;
கொங்கையை நிகர்த்தன - மகளிரது தனங்களை ஒத்து விளங்கின.

     வாழை,  கமுகு நிறைத்து,  முத்துமாலைகள் தொங்கவிட்டு,  பூர்ண
கும்பங்கள் வைத்து நகரைஅழுகுபடுத்தினர். பெண்களைப் பற்றிய
உவமைகளே அனைத்துக்கும் கூறியது நயம்.  வாழை திரட்சிக்கும், கமுகு
வரைக்கும் மென்மைக்கும்,  தாமம் வெண்மைக்கும் வரிசைக்கும், கும்பம்
வடிவமைப்புக்கும், ஒளிக்கும்உவமையாயின, இங்கே மரபுவழி உவமைகள்
உவமேயங்களாக வந்தமை காண்க.  ‘ஏ’  காரம் ஈற்றசை.             38

1437.முதிர் ஒளி உயிர்த்தன, முடுகிக் காலையில்
கதிரவன் வேறு ஒரு கவின் கொண்டான் என -