| கிளர்ந்து எறி சுடர் மணி இருளைக் கீறலால், - வளர்ந்தில, பிறந்தில, செக்கர் வானமே. |
வளம் கெழு திருநகர் - வளம் பொருந்திய அழகிய அயோத்தி நகரில்; வைகும்- பொருந்திய; பளிங்குடை நெடுஞ்சுவர் - பளிங்குக் கற்களையுடைய பெரிய சுவர்களில்;படுத்த பந்தியில் கிளர்ந்து எறிசுடர்மணி - சேர்த்தமைத்த வரிசையாய் அமைந்துமிக்கு மேலேறிப் பிரகாசிக்கின்ற ஒளிபடைத்த செம்மணிகள்; வைகலும் - நாள்தோறும்; இருளைக் கீறலால் - மாலைப் பொழுதில் மேல் எழும் இருளைப் போக்குதலால்; செக்கர்வானம் - செவ்வானமானது; (அங்கு) பிறந்தில - புதிதாகத் தோன்றவில்லை; வளர்ந்தில- வளரவும் இல்லை. பளிங்குச் சுவரில் பதித்த செம்மணிகள் இருள் கீற ஒளிர்கின்றன. செவ்வானம் போல உள்ளன.மாலையில் தோன்றி மறையும் செவ்வானம் இந்நகரில் எப்பொழுதும் ஒரு தன்மையாக இருந்தது; தோன்றவும் வளரவும் இல்லை என்று படியாம். ‘ஏ’ காரம் ஈற்றசை. 43 1442. | பூ மழை, புனல் மழை, புதுமென் கண்ணத்தின் தூ மழை, தரளத்தின் தோம் இல் வெண் மழை. தாம் இழை நெரிதலின் தகர்ந்த பொன் மழை. மா மழை நிகர்த்தன - மாட வீதியே. |
மாட வீதி - மாளிகைகளையுடைய தெருக்களில்; பூ மழை - மலர் மழையும்; புனல் மழை - (நீர் தெளித்தலால்) நீர் மழையும்; புதுமென் கண்ணத்தின் தூ மழை -புதிய மென்மையான வாசனைப் பொடியின் தூய்மையான மழையும்; தரளத்தின் தோம் இல் வெண்மழை- முத்துக்கள் சிந்துதலால் குற்றமற்ற வெள்ளிய மழையும்; இழைதாம் நெரிதலின் - பொன்னணிகள் நெருங்கி நெரிகின்ற காரணத்தால்; தகர்ந்த - (ஒன்றுடன் ஒன்று மோதி) உடைந்து பிதிர்ந்து கொட்டிய; பொன் மழை - கனக மழையும் கூடி; மா மழை-பெரியமழை பொழிவதை; நிகர்த்தன-ஒத்தன. நகரில் உள்ளவர் நீர் தெளித்து, மலர்களையும், சுண்ணப் பொடிகளையும் தூவி, முத்துகளைச்சிந்தி வீதியை அழகுபடுத்தினர், அப்போது அவர்தம் நெருக்கத்தால் அணிந்திருந்த பொன்னணிகள்மோதிப் பிதிர்ந்து பொன்மழையும் பொழிவதாயிற்று. இவையெல்லாம் பெருமழை பொழிவது போல் ஆயிற்று என்றார். ‘ஏ’ காரம் ஈற்றசை. ‘தாம்’ உரையசை. 44 1443. | காரொடு தொடர் மதக் களிறு சென்றன. வாரொடு தொடர் கழல் மைந்தர் ஆம் என; தாரொடு நடந்தன பிடிகள், தாழ் கலைத் தேரொடு நடக்கும் அத் தெரிவைமாரினே. |
|